ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பரமக்குடியில் முட்டி மோதப்போவது யார் யார்? யாருக்கு அதிக வாய்ப்பு!

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் சொந்த ஊர் பரமக்குடியில் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக மற்றும் டிடிவி தினகரனின் அமமுகவில் யார் யார் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி தொகுதி (sc) 1977ம் ஆண்டில் இருந்து 2019 வரை 11 முறை நடந்த தேர்தல்களில், 8 முறை அதிமுக வென்றுள்ளது.

199ல் மட்டும் திமுக வென்றுள்ளது. 2001ல் தமாகவும், 2006ல் காங்கிரஸ் கட்சியும் வென்றுள்ளன. கடைசியாக 2011, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் பரமக்குடியில் அதிமுகவே வென்றது. அதிமுகவின் கோட்டையாக இந்த தொகுதி கருதப்படுகிறது.

அதிமுக வெற்றி

அதிமுக வெற்றி

இந்த தொகுதியில் 2011ல் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்த போது, அதிமுக சார்பில் எஸ் சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2016ல் டாக்டர் சி முத்தையா வெற்றி பெற்றார். ஆனால் முத்தையா 2017ல் டிடிவி தினகரனுடன் சேர்ந்ததால் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து 2019ல் இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக சார்பில் சதர்ன் பிரபாகர் வெற்றி பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட முத்தையா மூன்றாவது இடத்தையே பிடித்தார்.

யார் யாருக்கு

யார் யாருக்கு

பரமக்குடியில் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள சதர்ன் பிரபாகரனுக்கும், 2011ல் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

முன்னிலையில் யார்

முன்னிலையில் யார்

முன்னாள் அமைச்சரான சுந்தர்ராஜன் அனைத்து சமூகத்தினரையும் அனுசரித்து செல்வார் என்றும் அவர் அமைச்சராக இருந்தபோது, பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார் என்றும் தலைமைக்கு நெருக்கமானவர் என்றும் அவருக்கே அவருக்கே சீட் கிடைக்க அதிக வய்ப்பு உள்ளது என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள் அதேநேரம் சதர்னின் ஆதரவாளர்களும், அவர் தொகுதிக்கு நிறைய செய்துள்ளார். அவருகே தலைமை சீட் தரும் என்றும் நம்புகிறார்கள்.

அமமுக சார்பில் யார்

அமமுக சார்பில் யார்

இதனிடையே திமுகவை பொறுத்தவரை,கடந்த முறை போட்டியிட்ட சம்பத்குமார் அல்லது சப்ரிஜிஸ்டர் பாலுக்கு வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். இருவருமே சீட் வாங்க கடுமையாக முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அமமுக சார்பில் டாக்டர் முத்தையா களம் இறங்குவார் என்று சொல்கிறார்கள்.

எங்கு போட்டியிடுவார்

எங்கு போட்டியிடுவார்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு சொந்த ஊர் என்றாலும் இங்கு அவரால் போட்டியிட முடியாது ஏனெனில் இது ரிசர்வ் தொகுதியாகும். அவர் மைலாப்பூரிலோ அல்லது வேளச்சேரியிலோ போட்டியிடலாம். பொள்ளாச்சி அல்லது கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது.

English summary
Paramakudi, the hometown of makkal neethi maiam leader Kamal Haasan: Let's see the ruling AIADMK, the opposition DMK, the ammk candidates is likely to contest in Paramakudi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X