India
  • search
ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமேஸ்வரத்தில் கதறி துடித்த பெண்! முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த கயவர்கள்! 2 பேரை தூக்கிய காவல்துறை

Google Oneindia Tamil News

ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் கடல் பாசி எடுக்கச் சென்ற பெண்ணை இறால் பண்ணையில் வேலை பார்த்த வடமாநில இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அப்பெண்ணின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. அவரது மனைவி சந்திரா. இவர் வடகாடு கடல் பகுதியில் கடற்பாசி சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை சந்திரா வழக்கம் போல் கடல் பாசி எடுக்க சென்றுள்ளார்.

அவர் மாலை வரை வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த அவரின் உறவினர்கள் வடகாடு கடல் பகுதியில் இரவு வரை தேடியும் சந்திரா குறித்து தகவல் எதுவும் கிடைக்காததால் சந்திராவின் கணவர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ராமேஸ்வரம்: கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம்- படுகொலை; வடமாநில கும்பல் வெறிச்செயல்! ராமேஸ்வரம்: கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம்- படுகொலை; வடமாநில கும்பல் வெறிச்செயல்!

ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி

ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி

இதையடுத்து வடகாடு பகுதிக்கு சென்ற நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஷ் மாயமான சந்திராவை தேடி செல்லும் போது வடகாடு காட்டு பகுதியில் சந்திரா உயிரிழந்த நிலையில் அரைநிர்வாணமாக கிடந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரம் அடைந்து இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர்.

கிராம மக்கள் போராட்டம்

கிராம மக்கள் போராட்டம்

மேலும் இறால் பண்ணையில் பணிபுரிந்த ஆறு வடமாநில இளைஞர்கள் மீதும் ஊர் பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டினர். இது குறித்து விசாரணைக்கு சென்ற போலீசார் அளித்த தகவலின் பெயரில் நகர் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு சந்திராவின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்ற போது அந்த பகுதியில் ஊர் மக்கள் திரண்டு சந்திராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

முகம் எரிப்பு

முகம் எரிப்பு

இந்நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக, இறால் பண்ணையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மூன்று வட மாநில இளைஞர்கள் கஞ்சா போதையில் சந்திராவை வழிமறித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின் சந்திராவின் கழுத்தை சேலையால் நெரித்து கொலை செய்து அடையாளம் காண கூடாது என்பதற்காக முகத்தை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிய வந்தது. போலீசார் முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் சந்திராவை மூன்று இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆறு இளைஞர்களில் யார் அந்த மூன்று பேர் என்பது குறித்து தெரியாமல் இருந்தது.

இருவர் கைது

இருவர் கைது

இந்நிலையில் மீனவ பெண்ணின் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை தொடர்பாக ஒடிசாவைச் சேர்ந்த விகாஸ் 24, பிரகாஷ் 22, ராகேஷ் 25, பிரசாத் 18, ரஞ்சன் ராணா 34, பிண்டு 18, ஆகிய 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இக் கொடூரமான செயலில் ஈடுபட்டது பிரகாஷ், ரஞ்சன் ராணா ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா எனவும் விசாரணை நடக்கிறது.

English summary
Police have arrested two odisha men for allegedly sexually abusing a woman in Rameswaram and killing her by pouring petrol on her face.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X