ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

9 வருஷமாச்சு.. நல்ல தண்ணியை பார்த்து.. இதுல எலக்ஷன் ஒரு கேடா.. குடங்களுடன் கொந்தளித்த மக்கள்

பரமக்குடி அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

பரமக்குடி: "9 வருஷமாச்சுங்க.. குடிக்க நல்ல தண்ணி கிடையாது.. இதுல எலக்‌ஷன் வேற நடத்தறாங்களா?" என்று செல்லூர் கிராம மக்கள் நடுரோட்டில் பிளாஸ்டிக் குடங்களை வைத்து கொண்டு உட்கார்ந்துவிட்டனர்!

தேர்தல் களம் சூடு பிடித்து, கட்சி சார்பில் பிரச்சாரங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. இந்த நேரத்தில் கஜா புயலால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், மீனவர்கள் என்று ஒரு தரப்பினர் தேர்தலை புறக்கணிக்க போவதாக சொல்லி வருகின்றனர்.

அதுபோலவே அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து சில கிராம மக்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

என்னங்க இது.. அழுது அடம்பிடிச்சு ஓட்டு கேட்கிறாரே என்னங்க இது.. அழுது அடம்பிடிச்சு ஓட்டு கேட்கிறாரே "அக்ரி".. ரொம்ப வித்தியாசமா இருக்கே!

செல்லூர் கிராமம்

செல்லூர் கிராமம்

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் செல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் யாருமே செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் இன்று போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். இதுகுறித்து விசாரித்தபோது கிராம மக்கள் சொன்னதாவது:

இன்னும் வரல

இன்னும் வரல

குடிக்க எங்களுக்கு தண்ணி இல்லைங்க.. காவேரி கூட்டு குடிநீர் திட்டம் 2009-ல் தொடங்கியாச்சு ஆனா இந்த கிராமத்துக்கு இன்னும் வந்து சேரலை. 95 வருஷமாச்சு.. செல்லூரில் 500 ஏக்கர் நீர் பாசனம் கொண்ட கண்மாய் மராமத்து செய்யப்படவே இல்லை.

எதுக்கு எலக்‌ஷன்?

எதுக்கு எலக்‌ஷன்?

பரமக்குடி முதல் செல்லூர் வரை வரத்து கால்வாய் அடைச்சிக்கிட்டு இருக்கு. அந்த ஆக்கிரமிப்பையும் சரி செய்யல. நாங்க ஏற்கனவே இது பத்தியெல்லாம் கலெக்டர் கிட்ட மனு கொடுத்துட்டோம். ஆனா ஒரு நடவடிக்கையும் எடுக்கல. அரசியல் கட்சியினர் யாருமே நுழைய அனுமதியும் கிடையாது.. அப்பறம் எதுக்கு இந்த எலக்‌ஷன்? இதை புறக்கணிப்பு செய்யறோம்..

முடிவு பண்ணிட்டோம்

முடிவு பண்ணிட்டோம்

இனியும் இவங்க எந்த நடவடிக்கையும் எடுக்கலேன்னா.. நாங்க எல்லோரும் எங்க ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை எல்லாத்தையும் கலெக்டர் கிட்ட ஒப்படைக்க முடிவு பண்ணிட்டோம்" என்று கொதித்து போய் சொல்கிறார்கள். பின்னர் காலிகுடங்களை நூற்றுக்கணக்கில் நடுரோட்டில் போட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் இந்த பிரச்சனை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

English summary
The Sellur village People are involved in the struggle for basic facilities. If the authorities did not take immediate action, they said they would boycott the MP election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X