பெண்களின் உள்ளாடைகளை திருடி உல்லாசம்.. சுவற்றில் ஆபாச வரைப்படம்.. இளைஞருக்கு போலீஸ் வலை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் குடியிருப்புகளில் காய போட்டிருந்த பெண்களின் உள்ளாடைகளை திருடி உல்லாசமாக இருப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த நபர் சாலைகளில் இரவு நேரங்களில் நிர்வாணமாக நின்று கொண்டு பெண்களை உறவுக்கு அழைப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் பகத்சிங் ரோடு உள்ளது. இந்த சாலைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத ஒரு பாழடைந்த கட்டடம் உள்ளது.
கொரோனா படுத்தும் பாடு! எலிகளை வளைத்து வளைத்துக் கொல்லும் ஹாங்காங் அரசு.. என்ன காரணம் தெரியுமா
இந்நிலையில் இந்தக் குடியிருப்பு பகுதியில் தினமும் உலா வரும் இளைஞர் அங்கு வீடுகளில் துணி காய வைக்கும் கயிறுகளில் இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை சேகரித்து வந்துள்ளார்.

ஆடை
தினமும் காயப்போட்ட உள்ளாடைகள் காணாமல் போனது குடியிருப்புவாசிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு நாள் வழக்கம் போல் துணிகளை காயப்போட்டுவிட்டு உள்ளாடைக்கு எந்த திருடன்தான் வருகிறான் என்பதை கண்டுபிடிக்க சிலர் மறைந்திருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த இளைஞர், உள்ளாடைகளை மட்டும் திருடிக் கொண்டு சென்றார். பெரிய பெரிய ஆடைகள், விலை உயர்ந்த ஆடைகள் இருக்க இதை கொண்டு அந்த இளைஞர் என்னதான் செய்கிறார் என்பதை அறிய அவரை சிலர் பின்தொடர தொடங்கினர். அப்போதுதான் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது.

பெண்களின் உள்ளாடைகள்
தினமும் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் அந்த இளைஞர் அங்குள்ள பாழடைந்த கட்டடத்தில் அந்த உள்ளாடைகளை சேகரித்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் தான் திருடி வந்த பெண்கள் உள்ளாடைகளுடன் உல்லாசமாய் இருந்து வந்தது தெரிந்தது. மேலும் அந்த பாழடைந்த கட்டடத்தில் உள்ள சுவர்களில் பெண்களை ஆபாசமாக வரைந்து அதன் மூலம் சுய இன்பம் பெற்று வந்ததும் தெரியவந்தது.

உள்ளாடைகளுடன் உல்லாசம்
இவ்வாறு தொடர்ந்து அந்த உள்ளாடைகளுடன் உல்லாசமாக இருப்பதாக கூறப்படும் அந்த இளைஞர் அவை பழையதாகிவிட்டால் அவற்றை எரித்துவிட்டு மீண்டும் துணி கட்டும் கம்பிகளில் காயப் போடும் உள்ளாடைகளை திருடி வந்து அதே போல் உல்லாசமாய் இருந்ததையும் அந்த பகுதி மக்கள் அறிந்தனர்.

சைக்கோவா
அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் வீதியில் வரும் பெண்கள் முன்பு தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்று அவர்களை உல்லாசத்துக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள குடியிருப்புவாசிகள் அந்த இளைஞர் குறித்து காவல் துறையில் புகார் கொடுத்தனர். அந்த இளைஞர் சைக்கோவாக இருக்கலாம் என போலீஸார் கருதுகிறார்கள். புகாரின் பேரில் அந்த இளைஞரை போலீஸார் தேடி வருகிறார்கள்