கைதான இயக்குனரின் செல்போனில் பல ஆபாச வீடியோக்கள்.. மிரண்டு போன ராமேஸ்வரம் போலீஸ்.. திடுக் தகவல்
ராமேஸ்வரம்: சினிமாவில் உங்களை ஹீரோயின் ஆக நடிக்க வைக்கிறேன் என்று பல பெண்களை சீரழித்து வீடியோ எடுத்து லட்சக்கணக்கில் பணம் பறித்த டுபாக்கூர் இயக்குனரை ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர். அவரை பற்றி பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி என்ற இமானுவேல் ராஜா. இவருக்கு 43 வயதாகிறது. இவர் தன்னை சினிமா இயக்குனர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு கடந்த 40 நாட்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் உள்ள விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்துள்ளார். சினிமா ஷுட்டிங் நடத்துவதாக கூறி மொத்தம் 7 விடுதிகளில் அறைகளை எடுத்துள்ளார்.
அதேநேரம் இமானுவேல் ராஜா தனியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கிறார். அத்துடன் பாம்பனை சேர்ந்த பைனான்சியர் ஒருவரிடம் சினிமா ஷூட்டிங்கிற்காக இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவரும் அழைத்து சென்று தனுஷ்கோடியில் ஷூட்டிங் லொக்கேஷன் காட்டி உள்ளார். இதனிடையே கார்த்திக் ராஜா என்பவரை சந்தித்து பூசாரி வேடத்தில் நடிக்க ஆள் தேவை எனவும், அதற்கு சம்பளமாக ரூ.10 லட்சம் தருவதாகவும் இமானுவேல் ராஜா கூறியிருக்கிறார்
சிதம்பரம்: வகுப்புக்கு வராமல் டிமிக்கி.. மாணவனை சரமாரியாக அடித்து, காலால் உதைத்த ஆசிரியர்.. வீடியோ

ஒரு லட்சம் போனது
இதில் நெகிழ்ந்து போன கார்த்திக்ராஜா, தன்னுடன் மனைவியையும் நடிக்க வைக்க இமானுவேல் ராஜாவிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இமானுவேல் ராஜா, சினிமா எடுக்க பணம் குறைவாக உள்ளதால், ஒரு லட்சம் தருமாறு கேட்டிருக்கிறார். இதை நம்பி அவரும் ஒரு லட்சம் ரூபாயை தூக்கி கொடுத்துள்ளார்.

ஆசை வார்த்தை
இதனிடையே இமானுவேல் ராஜா, தங்கியிருந்த விடுதியில் சினிமா நடிகர் தேர்வு நடைபெறுவதாக கூறி கார்த்திக் ராஜாவை வர சொல்லி இருக்கிறார். அப்போது இமானுவேல் ராஜா அறையில் தங்கியிருந்த வெளி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், ஒருவர் இமானுவேல் ராஜாவை நம்ப வேண்டாம். சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி என்னை போல் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். என்னிடமும் நகை, பல லட்சம் பணம் பறித்து விட்டார் என்று கார்த்திக் ராஜாவிடம் உண்மையை உடைத்திருக்கிறார்.

மடக்கிய போலீஸ்
இதனால், கார்த்திக் ராஜா தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப பெற இமானுவேல் ராஜாவிடம் போய் இருக்கிறார். அப்போது அங்கு ஒரு மேஜையில் துப்பாக்கி இருந்ததை கண்டு அச்சம் அடைந்த கார்த்திக் ராஜா, அவரை போலீசிடம் பிடித்துகொடுக்கலாம் என்று முடிவு செய்து ராமேஸ்வரம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் இமானுவேல் ராஜாவை தேடி விடுதிக்கு சென்றனர். அதற்குள் அவர் அறையை காலி செய்து விட்டு ராமேஸ்வரம் பஸ் நிலையத்திற்கு சென்றுவிட்டார். ஆனால் விடாத போலீசார் இமானுவேல் ராஜாவை மடக்கி கைது செய்தனர்.

அதிர்ச்சி அடைந்த போலீஸ்
அறையில் இருந்த துப்பாக்கி சிகரெட் லைட்டர் தான் என்பது விசாரணையில் தெரியவந்தது. எனினும் அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டுகள், காசோலைகள், கவரிங் செயின், கவரிங் தோடு ஒரு ஜோடி, ஆன்ட்ராய்ட் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள். பறிமுதல் செய்யப்பட்ட. செல்போன்களை ஆய்வு செய்தபோது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் பெண்களுடன் இமானுவேல் ராஜா உல்லாசமாக இருந்த வீடியோ, போட்டோக்கள் இருந்து இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அதன்பிறகு தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்.

பணம் கொடுத்து ஜாலி
அப்போது போலீசாரிடம் இமானுவேல் ராஜா அளித்த வாக்குமூலத்தை இப்போது பார்க்கலாம்: நான் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க விரும்பி ''கால் கேர்ள்'' என்ற இணைய பக்கம் மூலம் பதிவு செய்தேன். பதிவிற்கு விருப்பம் தெரிவித்த 2 பெண்களுடன் அறை எடுத்து தங்கி என்னை சினிமா இயக்குநர் என அறிமுகம் செய்தேன். தொடக்கத்தில் பணம் கொடுத்து உல்லாசமாக இருந்த இமானுவேல் ராஜா, சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய அந்த 2 பெண்களையும் அவர்களது தோழிகளையும் பல சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்து சென்று பணம் கொடுக்காமல் தான் விரும்பியபோதெல்லாம் உல்லாசம் அனுபவித்து வந்தேன்

இளம் பெண்கள்
புதுமுக நடிகைகள் தேவைப்படுவதால், இளம்பெண்கள் இருந்தால் தன்னிடம் அறிமுகப்படுத்துமாறு அப்பெண்களிடம் கேட்டேன். இதற்கு கமிஷன் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினேன். இதை நம்பிய பெண்கள் தங்களுக்கு தெரிந்த டிக் டாக் பிரபலம், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்த பெண்கள், சினிமா மோகம் கொண்ட இளம்பெண்களை அழைத்து வந்தார்கள். சினிமா திரைக்கேற்ற முகத்தோற்ற மாடலிங் போட்டோ தேவை என கூறி அரை நிர்வாணமாக பல்வேறு கோணங்களில் இளம்பெண்களை படம் பிடித்து அவர்களுடன் விடுதியில் உல்லாசமாக இருந்தேன்.

வாக்குமூலம்
கேமராவில் பதிவு செய்து அதனை காட்டி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தேன். இவர்களில் பல பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை அனுபவித்தேன். மேலும் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக கூறி மகளிர் குழுவினருக்கு வங்கி மூலம் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்கு தொடங்க ஒரு சிலருக்கு பண உதவி செய்தேன். இதை நம்பி இவரை அணுகிய பெண்கள் பலரிடம் ரூ.1.50 லட்சம் வரை மோசடி செய்தேன்" இவ்வாறு போலீசிடம் வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார். இதனிடையே இமானுவேல் ராஜா ஏற்கனேவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்ததும் ராமேஸ்வரம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இமானுவேல் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.