ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொல்லியும் கேட்காத கடைக்காரர்கள்.. எல்லாத்தையும் மக்களுக்கு ப்ரீயா கொடுங்க.. கலெக்டரின் கலகல!

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் புதிய பேருந்து நிலையத்தில் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

Google Oneindia Tamil News

பரமக்குடி: சொல்லி சொல்லி பார்த்தார் கலெக்டர்.. யாருமே கேட்கல... அதான் இப்படி அதிரடியான வேலையை பண்ணிட்டாரு!

ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டேண்ட் எப்பவுமே பரபரப்பு நிறைந்த பகுதி என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் இங்கு சிலர் விதிகளை மீறி ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைத்து வருவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவுக்கு புகார்களை அனுப்பினார்கள்.

இந்த புகாரின் பேரில் கலெக்டரும் பலமுறை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்திருப்போரை எச்சரித்தார். ஆனால் யாருமே அவர் பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து கடைகளை விரித்து கொண்டு வியாபாரம் செய்து கொண்டுதான் இருந்தனர். இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.

நான் எதுவேணாலும் பண்ணுவேன்.. போய் இன்ஸ்பெக்டரை வர சொல்லு.. அதிகாரி மிரட்டல்.. வைரல் வீடியோநான் எதுவேணாலும் பண்ணுவேன்.. போய் இன்ஸ்பெக்டரை வர சொல்லு.. அதிகாரி மிரட்டல்.. வைரல் வீடியோ

பஸ் ஸ்டாண்ட்

பஸ் ஸ்டாண்ட்

இந்நிலையில், திடீரென கலெக்டர் பஸ் ஸ்டாண்டில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது ஒதுக்கப்பட்ட இடத்தை காட்டிலும் பெரும்பாலான பகுதிகளை, கடை உரிமையாளர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்தது கண்டறியப்பட்டது. இதில் நிறைய கடைகள் ஸ்நாக்ஸ் விற்கும் கடைகள்தான்.

இறுகிய முகங்கள்

இறுகிய முகங்கள்

அந்த கடைகளுக்குள் நுழைந்து அங்கிருந்த உணவுப் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பொதுமக்களுக்கே விநியோகம் செய்ய உத்தரவிட்டார். கலெக்டர் இப்படி சொன்னதும் கடைகாரர்களின் முகம் மாறி விட்டது. பிறகு, விற்பதற்காக வைத்திருந்த முட்டை பப்ஸ், கேக், பிஸ்கட் உள்ளிட்ட பலவற்றை கடைக்காரர்களே இறுகிய முகத்துடன் எடுத்து இலவசமாக பொதுமக்களுக்கு தந்தனர்.

முட்டை பப்ஸ்

முட்டை பப்ஸ்

இந்த ஆக்கிரமிப்பு கடை ஒன்றிலேயே தண்ணீர் பாட்டிலை எடுத்து கலெக்டர் அனைவருக்கும் இலவசமாக தர சொன்னார். பொதுமக்களுக்கு திடீரென முட்டை பப்ஸ், கேக் கிடைத்திடவும் ஆசை ஆசையாக வாங்கி சாப்பிட்டதுடன், இலவசமாக கிடைத்த வாட்டர் பாட்டில் தண்ணீரையும் குடித்து முடித்தனர்.

பிளாஸ்டிக் கவர்

பிளாஸ்டிக் கவர்

அந்த நேரம் பார்த்து ஒரு இளைஞர் பிளாஸ்டிக் கவருடன் தண்ணீர் பாட்டில் வாங்க முன்வந்தார். இதை பார்த்த கலெக்டர், பிளாஸ்டிக் வைத்திருப்பதால் தண்ணீர் தர முடியாது என்று சொல்லி அவரை எச்சரித்து, திருப்பி அனுப்பிவிட்டார். இதையெல்லாம் பார்த்த பொதுமக்கள் கலெக்டரை பாராட்டியபடியே அங்கிருந்து நகர்ந்தனர்.

English summary
Ramnad District Collector Veera Raghava Rao takes necessary actions in New Bus Stand
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X