ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை அட்டூழியம்- ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை கடற்படையால் அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வருகிறது.

Srilanka Navy arrests 9 TN Fishermen

இது தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்யும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடி பகுதியில் அதிகாலையில் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அத்துமீறி அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

ஹரியானா: முதல்வர் கட்டாரின் நிகழ்ச்சியை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை வீச்சுஹரியானா: முதல்வர் கட்டாரின் நிகழ்ச்சியை முற்றுகையிட்ட விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை வீச்சு

பின்னர் படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

English summary
Srilanka Navy had arrested Nine Tamilnadu Fishermen on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X