ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக மீனவர்களை நடுக் கடலில் விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டகாசம்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து அட்டகாசம் செய்துள்ளது.

இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியடித்தது மட்டுமல்லாது மீன்பிடி வலைகளையும் உபகரணங்களையும் சேதப்படுத்தி இலங்கை கடற்படை அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளது.

Tamil fisherman atacked by srilankan navy

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கச்சத் தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த அவர்களை ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை, மீனவர்களை அங்கே மீன்பிடிக்க கூடாது என விரட்டியது.

அது மட்டுமல்லாது மீன்பிடி வலைகளையும் சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தியுள்ளது. தொடரும் இலங்கை கடற்படை அட்டகாசத்தால் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர் தமிழக மீனவர்கள். இதனால் தங்கள் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்படையும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

English summary
Rameshwaran Fishermen are struggling to protect their traditional profession as the Lankan navy is continuing its attack on the community.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X