ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சனிக்கிழமை ராத்திரி ஆயிடுச்சுன்னா.. 3 பேருக்கும் குஷிதான்.. வளைத்து பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    சனிக்கிழமை நாட்களில் மட்டும் திருடும் 3 பேர் கைது-வீடியோ

    ராமநாதபுரம்: போட்டோவில் இருக்கும் இந்த 3 சார்களும் திருடர்கள்.. அதுவும் சனிக்கிழமைகளில் மட்டும்தான் திருடுவாங்க.. இதுதான் இவர்களின் ஸ்பெஷல்!

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, தினைக்குளம், தாமரைகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரெண்டு மாசமா ஒரே திருட்டு தொல்லை.. யார் திருடுகிறார்களே என்றே தெரியாது, ஆனால் ஏதாவது ஒரு வீட்டில் கண்டிப்பாக திருடு போய்விடும்.

    அதுவும் வார கடைசி சனிக்கிழமை ராத்திரிகளில் மட்டும் இந்த திருட்டு சம்பவம் நடந்து வந்தது. செல்போன், கேமரா, லேப்டாப் போன்ற பொருட்கள் அதிகமாக இருக்கும் கடைகள், வீடுகளாக பார்த்து திருடு போய் கொண்டே இருந்தன. இது சம்பந்தமான திருப்புலாணி போலீசாருக்கு தினம் ஒரு புகாரும் வந்து கொண்டே இருந்தது.

    தனிப்படை

    தனிப்படை

    இதனால் திருடர்களை பிடிப்பதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. புகார் வந்த கிராமங்களில் உள்ள சிசிடிவி காமிராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது கடந்த சனிக்கிழமை ராத்திரி, குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள அரிசி மண்டியில் ஒருவர் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒரு லேப்டாப், 10 ஆயிரம் பணத்தை திருடுவது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

    சிசிடிவி கேமரா

    சிசிடிவி கேமரா

    இதனால் அந்த வீடியோவில் உள்ளதிருடனை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பிறகு திணைகுளம் பகுதியில் உள்ள சிசிடிவி காமிராவை ஆய்வு செய்தனர். அங்கு கடந்த ஜுன் 29-ம் தேதி அதாவது சனிக்கிழமை ராத்திரி செல்போன் கடையில் ஒருவர் திருடுவது பதிவாகி இருந்தது. ஆராயப்படும் சிசிடிவி காமிராக்களில் இருப்பது குறிப்பிட்ட அதே நபர்தான் என்று பிறகு தெரியவந்தது.

    துரத்தி பிடித்தனர்

    துரத்தி பிடித்தனர்

    அதனால் அந்நபரை பிடிக்க போலீசார் தீவிரமானர்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டேண்டில் 3 பேர் திருட முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்றதும், அங்கிருந்த 3 பேரும் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை துரத்தி பிடித்து திருப்புல்லாணி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    நட்பு

    நட்பு

    சின்னசேலத்தை சேர்ந்த வெங்கடேசன், அழகன்குளத்தை சேர்ந்த மகேந்திரன், முசிறியை சேர்ந்த லோகநாதன் ஆகியோர்தான் இந்த மூவர். இந்த 3 பேருக்குமே திருச்சி ஜெயிலில் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு வெளியே வந்தும் இதே வேலையை காட்டி உள்ளனர்.

    சென்ட்டிமென்ட்

    சென்ட்டிமென்ட்

    வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபடுவது இவர்களின் பழக்கம். அதாவது இது இவர்களது சென்ட்டிமென்ட்டாம். அதுவும், செல்போன், லேப்டாப், கேமராதான் இவர்களுக்கு குறியாம். தீவிர விசாரணைக்கு பிறகு இவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு இவர்களின் நட்பு தொடர்கிறது!

    English summary
    Three Weird thieves only steal on Saturdays and arrested by Ramnad Police
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X