ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கியிருந்து வந்த நோட்டீஸ்.. மயங்காத குறையாக குழம்பிய மரிய குழந்தையின் மகன்.. காரணம் இதுதான்!

திருவாடானை எஸ்பிஐ அனுப்பிய நோட்டீஸால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இறந்தவர்களின் பெயர்களில்நோட்டீஸ் அனுப்பிய எஸ்.பி.ஐ. வங்கி-வீடியோ

    திருவாடானை: செத்து போனவர்களின் பெயர்களில் எஸ்.பி.ஐ. வங்கி நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் திருவாடானை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
    திருவாடானையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கி கிளையில் இருந்து சின்னகீரமங்கலத்தைச் சேர்ந்த மரியகுழந்தை என்பவருக்கு நோட்டீஸ் ஒன்று வந்தது. அதை மரியகுழந்தையின் மகன் வாங்கி படித்து பார்த்தார். பிறகு ஷாக்கில் உறைந்து நின்றார்.

    ஏனென்றால் மரியகுழந்தை இறந்து 5 வருஷம் ஆகுதாம். அவர் சாகிறவரை யார்கிட்டயும், எதுக்காகவும் கடனே வாங்கியது கிடையாதாம். ஆனால் வங்கியில் லோன் வாங்கியதாகவும், அதை வட்டியுடன் கட்ட வேண்டும் என்றும் நோட்டீஸ் வந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார்.

     மாரியம்மாள்

    மாரியம்மாள்

    இதேபோல மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவருக்கும் ஒரு நோட்டீஸ் வந்திருக்கிறது. மாரியம்மாள் பல லட்சம் வாங்கி இருப்பதாகவும், கடனை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டு இருந்தது. மாரியம்மாள் செத்து பல வருஷம் ஆகிவிட்டதாம்.

     டென்ஷன் ஆகும் மக்கள்

    டென்ஷன் ஆகும் மக்கள்

    நோட்டீசை பார்த்தவர்களுக்கு இதயமே நின்று போனது போல ஆகிவிட்டது. இப்படியே திருவாடானை பகுதிகளில் நிறைய பேருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. வாங்காத கடனுக்கு மட்டுமில்லை, இறந்துபோனவர்களின் பெயர்களில் எல்லாம் நோட்டீஸ் வரவும் பலர் டென்ஷன் ஆகிவிட்டனர்.

     அலட்சிய பதில்

    அலட்சிய பதில்

    இதுகுறித்து, திருவாடானை எஸ்.பி.ஐ. வங்கி மேனேஜரிடம் சம்பந்தப்பட்டவர்கள் சென்று கேட்டார்களாம். அதற்கு அவர், இது குழு லோன் என்றாராம். அப்படியென்றால் என்ன என்று கேட்டதற்கு, "நீங்க லோன் வாங்கலைதானே? அப்படின்னா அந்த நோட்டீசை தூக்கி போட்டுட்டு பேசாமல் இருங்க" என்று அலட்சியமாக பதில் சொல்கிறாராம்.

     ரிசர்வ் வங்கி

    ரிசர்வ் வங்கி

    இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் ரிசர்வ் வங்கிக்கு புகார் தெரிவிக்க போறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனாலும் நோட்டீஸ் தொடர்ந்து பலருக்கு வந்து கொண்டே இருக்கிறதாம்!

    English summary
    Thiruvadanai SBI Bank issue false Notices
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X