Just In
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்- 2 பேர் படுகாயம்
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்கியதில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் இலங்கை கடற்படை போர்க்கப்பல்களை நிறுத்தி உள்ளது. அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கினர் இலங்கை கடற்படை வீரர்கள்.

மேலும் தமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தும் நாசம் செய்தனர் இலங்கை கடற்படையினர். இந்த அட்டூழியத் தாக்குதலில் 2 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.
கொரோனா தடுப்பூசி கொள்முதல்.. அசத்தும் இந்தியா.. 150 கோடி டோஸ் ஆர்டர்.. டாப் 3வது நாடு நாமதான்
இதனையடுத்து அப்பகுதியில் மீன்பிடிக்காமல் தமிழக மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அண்மைக்காலமாக இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.