ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரீவைண்ட் 2020... நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த போலி ஐஏஎஸ், குக்கரில் சாராயம்.. ராமநாதபுரம் டாப் 10!

Google Oneindia Tamil News

ராமநாதபுரம் : 2021 புதுவருடம் வர பிறக்க உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்புகளை பார்க்கலாம்/

Recommended Video

    ரீவைண்ட் 2020... இராமநாதபுரம் டாப் 10..!

    ராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரி முதல் இடத்தில் உள்ளது. ராமநாதபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இதனால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்,

    நடுக்கடல் கச்சத்தீவில் திருவிழா 2ஆம் இடத்தில் உள்ளார். ஆண்டு தோறும் கச்சத்தீவில் உள அந்தோணியார் தேவாலய திருவிழாவில் தமிழகம், ஈழ தமிழர்கள் பங்கேற்று வந்தனர். அதன்படி இவ்வாண்டும் நடைபெற்ற திருவிழாவுக்கு 3,000 தமிழக பக்தர்கள் ராமேஸ்வரத்தில் இருந்து படகுகளில் சென்றனர்.

    சிக்கிய கொத்தனார்

    சிக்கிய கொத்தனார்

    3ஆம் இடத்தில் குக்கரில் சாராயம் காய்ச்சிய கொத்தனார்.. காட்டிக் கொடுத்தது மது வாடை உள்ளது. இராமநாதபுரம் அருகே பனைக்குளம் அடுத்த சேர்வைகாரன் ஊரணியில் வசிப்பவர் கருணாகரன். கொத்தனார் ஆன இவர் கொரோனா ஊரடங்கால் மது அருந்த முடியாமல் தவிக்க வீட்டில் குக்கரிலேயே சாராயம் காய்ச்சி உள்ளார். குக்கர் விசிலடித்த நிலையில், அதில் இருந்து வந்த வாசத்தால் இப்போது போலீசில் சிக்கி கம்பி எண்ணி வருகிறார்.

    நடிகைகளுடன் உல்லாசம்

    நடிகைகளுடன் உல்லாசம்

    4ஆம் இடத்தில் ஊருக்கே அல்வா கொடுத்த போலி ஐ.ஏ.எஸ் ஆபிசர் . அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி, லட்சக்கணக்கில் மோசடியும் செய்து, அந்த பணத்தில் 10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த போலி ஐஏஎஸ் நாவப்பனை ராமநாதபுரம் போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.

    பழனி வீர மரணம்

    பழனி வீர மரணம்

    5ஆம் India-China Border-ல் உயிர் நீத்த பழனி .. இந்தியா- சீனா எல்லையில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர் அதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரரும் அடங்குவார். தனது 18 வயதில் ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தார். இன்னும் ஓராண்டில் பணி நிறைவடைய உள்ள நிலையில் குடும்பத்துடன் சேர்ந்து வாழ நினைக்கையில் நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்தார்.

    ராமேஸ்வரம் பாலம்

    ராமேஸ்வரம் பாலம்

    ராமேஸ்வரம் கடல் பகுதியில் புதிய ரயில் பாலம் 6ஆம் இடத்தில் உள்ளது. ராமேஸ்வரம் - பாம்பன் கடல் பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள ரயில் பாலம் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்தில் 99 தூண்களுடன் அமைக்கப்பட உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்திற்கும், கப்பல் செல்லும் போது திறந்து மூட வசதியாக, 63 மீட்டர் நீளத்திற்கு தூக்குபாலம் அமைக்கப்படவுள்ளது இதற்க்கான பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது

    70வயதில் சாகசம்

    70வயதில் சாகசம்

    70 வயதிலும் சாகசம் காட்டும் கணபதி!! 7ஆம் இடத்தில் உள்ளார், ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி கணபதி முருகேசன். வயது 70. இவர் தினமும் கட்டிட வேலைக்கு சென்று ஒரு நாளைக்கு ரூ. 800 வருமானம் பெறுகிறார். இதற்கிடையில் காலை மற்றும் மாலை வேளைகளில் 200 குழந்தைகளுக்கு சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கிறார். சிலம்பாட்டம், தமிழகத்தின் பாரம்பரிய, தற்காப்புக் கலை இந்த மண்ணில் இருந்து மறையக் கூடாது என்பதற்காக இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறார்.

    தனித்திறமை

    தனித்திறமை

    8 வயது சிறுவனின் அபார ஆற்றல் 8ஆம் இடத்தில் உள்ளது . ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுவன் சந்தோஷ்கண்ணா காரின் படத்தை பார்த்தே அந்த கார் எந்த வகை மாடலை சேர்ந்தது, அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என கார் ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்களை போல் முழு தகவல்களை தருகிறான். மேலும், சிறுவன் சந்தோஷ் கண்ணாவுக்கு அபார நினைவாற்றல் உள்ளதால் அண்மைக்காலமாக வெளியாகிய கொரோனா பாதிப்பு விவரங்களை மாவட்ட வாரியாகவும் கூறுகிறான். சிறுவனின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் அவனுக்கு தேவையான ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஆசிரியர்களும், பெற்றோரும் அளித்து வருகின்றனர்.

    குருபூஜை

    குருபூஜை

    முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா 9ஆம் இடத்தில் உள்ளது. முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58-வது குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ் மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை, பொதுவாழ்வில் நேர்மை போன்றவற்றிற்காகத் தன் வாழ் நாள் முழுவதும் பாடுபட்டவர் தேவர் பெருமகனார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடல் சீற்றம்.

    கடல் சீற்றம்.

    கடல் சீற்றம்.. மணல் மேட்டில் மோதும் அலைகள்.10 ஆம் இடத்தில் உள்ளது. புரவி புயலால் ராமேஸ்வரம் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது . கடல் அலைகள் மிகவும் ஆக்ரோஷமாக பொங்கி வந்தன படகுகளை நிறுத்தி வைத்திருக்கும் மணல் பரப்புகளிலும் தண்ணீர் சூழ்ந்து கொண்டதுமணல் மேட்டில் மோதும் அலைகள்.. அதே வேகத்தில் ரிட்டர்ன் ஆனது. இது தான் மக்களே ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் . மக்களே நீங்களும் உங்களுக்கு தெரிந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ந்த செய்திகளை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

    English summary
    Ramnathapuram Year Ender 2020: With the New Year 2021 looming, many interesting events have taken place in Ramanathapuram district in the year 2020. Liquor brewed in a cooker .. New railway bridge in Rameswaram sea area, 113th Jayanti festival of Muthuramalingam Devar, has been included in the top 10 news.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X