"அந்த கண்டக்டர்.. இப்ப, இங்கே, உடனே, வந்தாகணும்".. சவுண்டு விட்ட தம்பதி... வெலவெலத்து போன ராமேஸ்வரம்
ராமேஸ்வரம்: கைக்குழந்தையுடன் நடுரோட்டில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினரின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைராகி கொண்டிருக்கிறது.
அந்த காலம் முதல் இப்போது வரை பஸ்களில் "சில்லறை" பிரச்சனை பெரும் பிரச்சனையாக தொடர்ந்து இருந்து வருகிறது.. டிக்கெட் பணம் போக, மீதி சில்லறைகள் பெரும்பாலும் பயணிகளுக்கு வந்து சேர்வதில்லை.
எப்போழுது கேட்டாலும் சில்லைரை இல்லை அல்லது இறங்கும்போது வாங்கிக் கொள்ளுங்கள் என்பதே கண்டக்டர்களின் வழக்கமான பதிலாக இருந்து வருகிறது.
சிலர் இதை பெரிதுபடுத்துவதில்லை.. சிலர் இதை ஒரு பிரச்சனையாகவே மாற்றி விடுவார்கள்.. நம்முடைய காசை வாங்குவதற்கு நாம் ஏன் தயங்கணும்? என்பது சிலரின் பதிலாக இருக்கம்.. ஒரு ரூபாய்க்காக அத்தனை முறை போய் கேட்கணுமா? என்று பலர் வெட்கப்பட்டுகொண்டு கேட்காமலேயே இறங்கி விடுவதும் உண்டு. சில்லறை விஷயத்தை சாதாரணமாக எடுத்து கொண்டும் போய்விடமுடியாது.
ஊழல் ஒழிப்பில் உறுதியாக நின்ற அதிகாரி..நல்லம்ம நாயுடு மறைவு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..நேரில் அஞ்சலி

சிறைபிடிப்பு
இப்படித்தான் ஒருமுறை உரிய சில்லறை பாக்கி தராத காரணத்தினால், சம்பந்தப்பட்ட பஸ்ஸை பயணிகள் சிறைபிடித்த சம்பவமும் நடந்துள்ளன.. புதுச்சேரியிலிருந்து, சென்னைக்கு ஒரு பஸ் வந்துள்ளது.. பாக்கி பணம் 70 ரூபாயை கண்டக்டர் உரிய பெண்ணுக்கு தரவில்லை போலும்.. பலமுறை கேட்டும் கண்டக்டர் தராத காரணத்தினால் அந்த பெண், புதுப்பட்டினத்தை நெருங்கும்போது, ஒரு போனை போட்டு தன்னடைய சொந்தக்காரர்களை எல்லாம் வரவழைத்தார். மொத்த உறவினர்களும் புதுப்பட்டினத்தில் அந்த பஸ்ஸை சிறைபிடித்தனர். கல்பாக்கம் ஸ்டேஷனுக்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது.. இறுதியில் 70 ரூபாய் அந்த பெண்ணிடம் திருப்பி வழங்கப்பட்டது.

ராமேஸ்வரம்
இப்போதும் ஒரு சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.. மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அரசு பஸ் ஒன்று சென்றுள்ளது.. அதில், ராமேஸ்வரம் புதுரோடு பகுதியை சேர்ந்த கோபி- சிந்து தம்பதி, தங்கள் குழந்தையுடன் மதுரையிலிருந்து வந்திருக்கின்றனர்.. அந்த பஸ்ஸின் கண்டக்டர் ஜெய்சங்கர் இவர்களுக்கு டிக்கெட் தந்துள்ளார்.. ஆனால், வழக்கம்போல் சில்லறை பாக்கியை பிறகு தருவதாக சொல்லி உள்ளார்.

மண்டபம்
பஸ், மண்டபத்தை கடந்து ராமேஸ்வரத்தை நெருங்கி கொண்டிருந்தது.. அதனால், கண்டக்டரிடம் சில்லறை பாக்கி கேட்டிருக்கிறார் கோபி.. ஆனால், அவர் சில்லறை கேட்டதை கண்டக்டர் காதிலேயே வாங்கவில்லையாம்.. கோபியையும் கண்டுகொள்ளவே இல்லையாம்.. இதனால் தம்பதி இருவருமே கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்திருக்கின்றனர்... இதனால் ஜெய்சங்கர் ஆத்திரமடைந்து, தம்பதியை அசிங்கமாகவும், தகாத வார்த்தைகளிலும் பேசியதாக தெரிகிறது.

கைகுழந்தை
அதனால், மனமுடைந்து போன தம்பதி, மண்டபம் பஸ் ஸ்டேண்டில் இறங்கி, அந்த பஸ் முன்னாடியே, கைகுழந்தையுடன் தர்ணாவில் உட்கார்ந்துவிட்டனர்.. அவதூறாகப் பேசிய கண்டக்டரை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. கைக்குழந்தையுடன் இவர்கள் இப்படி உட்கார்ந்து கோஷம் எழுப்பியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... அந்த பஸ்ஸை தொடர்ந்து அங்கிருந்து நகர்த்தவும் முடியாமல் போனது.. இதனால் பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகள் உடனடியாக இறங்கி அவர்களை சமாதானப்படுத்தினர்.

சமாதானம்
ஆனால், அந்த தம்பதியோ, கண்டக்டர் ஜெய்சங்கர் அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கறாராக சொல்லி விட்டனர்.. இந்த விஷயம் அதற்குள் மண்டபம் போலீசுக்கு சென்றதும், அவர்களும் விரைந்து வந்தனர்.. இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்... இதையடுத்து, ஜெய்சங்கர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பரிந்துரைப்பதாக சொல்லி, அந்த பேருந்தை அனுப்பி வைத்தனர்.