ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோகத்தின் உச்சம்.. காஜலை சந்திக்க பேராசை.. கும்பலிடம் சிக்கிய தொழிலதிபரின் மகன்.. ரூ. 75 லட்சம் ஏவ்

காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு 75 லட்சத்தை இளைஞர் இழந்துள்ளார்

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: நடிகை காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு, தொழிலதிபரின் மகன் ஒருவர் சுமார் 75 லட்சம் ரூபாயை ஒரு மோசடி கும்பலிடம் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகனுக்கு வயசு 27. கொஞ்ச நாளைக்கு முன்னாடி இன்டர்நெட்டில் இருந்த ஒரு அட்ரஸ்-க்குள் போனார்.

நடுநடுவே ஆபாசமான போட்டோக்கள் வந்தன. அதை டெலிட் செய்யலாம் என்று போனால் இன்னொரு வெப்சைட் திறந்தது. அதில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் கொட்டி கிடந்தன. "யாருக்கு ஆசையோ, இந்த நடிகைகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்" என்று ஒரு குறிப்பு இருந்தது.

நுழைவு கட்டணம்

நுழைவு கட்டணம்

உடனே தொழில் அதிபர் மகனுக்கு சபலம் வந்து, தன்னுடைய செல்போன் நம்பர் முதல் எல்லா விவரத்தையும் அதில் போட்டுவிட்டார். அடுத்த செகண்ட்டே, "யாரை சந்திக்க உங்களுக்கு ஆசை" என்ற கேள்விவந்தது. அதற்கு இளைஞர் காஜல் அகர்வாலை சந்திக்க வேண்டும் என்று சொல்லவும், ரூ.50 ஆயிரம் நுழைவுக் கட்டணத்தை செலுத்துங்கள்" என்று பதில் வந்தது.

50 ஆயிரம் ரூபாய்

50 ஆயிரம் ரூபாய்

இவர்தான் தொழில் அதிபர் மகனாயிற்றே.. அடுத்த வினாடியே பேங்கில் இருந்து பணத்தினை கட்டிவிட்டார். அது உறுதி செய்வதற்கான ஒரு மெசேஜும் வந்தது. பணத்தை கட்டிவிட்டதும், வானத்திலேயே பறந்தார் இளைஞர். இதனிடையே, இணையதளத்தில் பதிவு செய்த தகவலைக் கொண்டு, 50 ஆயிரத்தை பிடுங்கியவர்களோ, அந்த இளைஞர் யார், வசதியானவர் என்றால் திரும்பவும் பணத்தை கறக்கலாம் என்று நோட்டம் போட்டுள்ளனர்.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

இது நடந்து முடிந்த சில நாட்களில், இன்னும் கொஞ்சம் பணத்தை செலுத்தினால் காஜர் அகர்வாலிடம் அழைத்து செல்கிறோம் என்று தகவல் வரவும்தான் இளைஞர் உஷார் ஆனார். அதனால் அப்படியே பின்வாங்க ஆரம்பித்தார். ஆனால் எதிர்தரப்பினர் படு உஷார் பார்ட்டிகள்... இளைஞர் ஜகா வாங்கவும், அடுத்த சிலநிமிடங்களில், அவரையும், வேறு சில பெண்கள், நடிகைகளை இணைத்து ஆபாச படங்களை செல்போனுக்கு அனுப்ப தொடங்கினர்.

தவணை

தவணை

இதை பார்த்ததும் இளைஞர் பதறி போய்விட்டார். மார்பிங் செய்த படங்களை டெலிட் செய்யுங்கள் என்று கேட்டதற்கு, கேட்கும் பணத்தை தந்துவிட்டால் அழிக்கிறோம் என்று மிரட்டினர். வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்த இளைஞர், அவர்கள் கேட்ட ரூ.60 லட்சத்தை 3 தவணையாக பேங்கிற்கு அனுப்பி உள்ளார். இதையும் வாங்கி கொண்டு திரும்ப திரும்ப பணத்தை கேட்டனர் அந்த கும்பல்.

புகார்

புகார்

இதனால் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளான இளைஞர், சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டே போய்விட்டார். வீட்டில் செல்ல மகனை காணாமல் போலீசில் புகார் தரவும், கடைசியில் கொல்கத்தாவில் இருந்து இளைஞரை மீட்டனர் போலீஸ். அப்போதுதான் காஜல் அகர்வாலை சந்திக்க ஆசைப்பட்டு ரூ.60 லட்சத்தை இழந்தது தெரியவந்தது.

கிரிக்கெட் சூதாட்டம்

கிரிக்கெட் சூதாட்டம்

பணம் செலுத்திய வங்கி கணக்கினை வைத்து தேவகோட்டை பாவனாகோட்டை மணிகண்டன் என்பவருடையது என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், சென்னையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சரவணக்குமார்தான் இப்படி செய்ய சொன்னார் என்று தெரிவித்தார். இதையடுத்து சரவணக்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், நடிகை மோகம் காட்டி இதுவரைக்கும் இளைஞரிடம் பெற்ற ரூ.75 லட்சத்தில் ரூ.68 லட்சத்தை உலக கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்தது தெரிய வந்தது.

2 பேருக்கு வலை

2 பேருக்கு வலை

இதனால் எஞ்சிய தொகையை கைப்பற்றிய போலீசார் சரவணகுமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இதில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால் அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

English summary
Ramnad Youth lost Rs. 75 lakhs to online fraud gang to meet Actress Kajal Aggarwal and one person arrested
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X