விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்மச்சாவு.. போலீஸ் மீது உறவினர்கள் பகீர் புகார்.. பரபரப்பு!
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் அவரை அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நீர்கோழினேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிது.

மர்மமான முறையில் உயிரிழந்தார்
இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று மடக்கிபிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசாரணை முடிந்து மணிகண்டன் வீடு திரும்பினார். ஆனால் சிறிது நேரத்தில் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அடித்துக் கொலை?
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மணிகண்டனை போலீஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். போலீசார் தரப்பில் பாம்பு கடித்து அவர் இறந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் அதை உறவினர்கள் ஏற்க மறுத்த நிலையில் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

போலீசார் குவிப்பு
இளைஞரின் உடல் பிரேதே பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக முதுகுளத்தூர் டிஎஸ்பி ஜான் பிரிட்டோ,மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு டிஎஸ்பி திருமலை ஆகியோர் சம்பவ இடத்தில் உள்ளனர்.

சாலை மறியல்
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மர்மமான முறையில் இறந்த மணிகண்டனின் உறவினர்கள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அதனடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததனர். அதன்பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.