ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்கதான் காரணம்.. உங்களால்தான் வைரஸ் பரவியது.. ஈரான் மீது சவுதி பகீர் குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு ஈரான் நாடு முக்கிய காரணம் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

ரியாத்: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கு ஈரான் நாடு முக்கிய காரணம் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

Recommended Video

    கொரோனவால் கிடைத்த வாழ்வு... 54,000 கைதிகள் விடுதலை

    கொரோனா வைரஸ் உலகம் முழுக்க முன்பை விட 17% அதிக வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது.

    99,001 பேர் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதித்துள்ளனர். உலகம் முழுக்க 3,356 கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். ஈரானில் மிக வேகமாக வைரஸ் பரவி வருகிறது. அங்கு 3,513 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 117 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.

    கொரோனா

    கொரோனா

    இந்த நிலையில் காலம் முழுக்க கொரோனா வைரஸ் பரவ ஈரான் ஒரு முக்கிய காரணம் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் இந்த வைரஸ் பரவ ஈரான்தான் காரணம் என்று சவுதி அரேபியா கூறியுள்ளது. சவுதியின் இந்த புகாருக்கு முக்கிய காரணம் இருக்கிறது. பொதுவாக ஒரு நாட்டுக்கு வெளிநாட்டு நபர் சென்றால் அவரின் பாஸ்போர்ட்டில் அந்த நாட்டின் முத்திரை குத்தப்படும். ஆனால் ஈரான் கடந்த சில நாட்களாக இதை செய்யவில்லை.

    வெளிநாடு

    வெளிநாடு

    அதாவது ஈரான் வந்துவிட்டு திரும்ப வெளிநாட்டு மக்கள் சிலரின் பாஸ்போர்ட்டில் ஈரான் முத்திரையை இல்லை. இதுதான் தற்போது ஈரான் மீது சவுதி வைக்கும் குற்றச்சாட்டு. சவுதி அரேபியாவில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது. அதில் மூன்று பேர் ஈரான் சென்றுவிட்டு திரும்பியவர்கள் . இவர்கள் மூலம்தான் சவுதியில் மற்ற இருவருக்கும் கொரோனா வைரஸ் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன சிக்கல்

    என்ன சிக்கல்

    இதில் என்ன சிக்கல் என்றால் இந்த 3 பேரில் இரண்டு பேர் ஈரானில் இருந்து பஹ்ரைன் சென்றுவிட்டு பின் சவுதி வந்தவர்கள். இன்னொருவர் குவைத் சென்றுவிட்டு சவுதி வந்து இருக்கிறார். இவர்களின் பாஸ்போர்ட் எதிலும் ஈரான் முத்திரை இல்லை. இதனால் இவர்களை இந்த மூன்று நாட்டு விமான நிலையங்களிலும் சோதனைக்கு உட்படுத்தவில்லை.

    சோதனை

    சோதனை

    ஈரானில் இருந்து வந்தவர்கள் இப்படி சோதனை செய்யப்படாமல் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். முத்திரை இல்லாததால் இவர்கள் ஈரான் சென்று திரும்பியதே தெரியாமல் இருந்துள்ளது. இவர்கள் மூலம்தான் தற்போது பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளிலும் வைரஸ் பரவி இருக்கிறது என்கிறார்கள். இதுதான் ஈரான் மீது சவுதி புகார் வைக்க காரணம்.

    சவுதி மக்கள்

    சவுதி மக்கள்

    தற்போது சவுதி மக்களுக்கு அந்நாட்டு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி ஈரானுக்கு கடந்த பிப்ரவரி 1ல் இருந்து சென்று வந்த எல்லோரும் உடனே அரசிடம் அதை தெரிவிக்க வேண்டும். அவர்களின் உடலை பரிசோதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. நாளை வரை இதற்கு நேரம் அளிக்கப்படும். இந்த விவரத்தை தெரிவிக்காத நபர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி எச்சரித்துள்ளது.

    English summary
    Coronavirus: Saudi says Iran is the reason for Disease spread all over the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X