ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை!

சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2019 : மத்திய பட்ஜெட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட வரியால் வந்த வினை- வீடியோ

    ரியாத்: சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலால் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

    சவுதி அரேபியா ஹவுதி போராளி குழுக்கள் இடையிலான சண்டை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கடந்த சில மாதங்களாக சவுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் மீது ஹவுதி போராளி குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகிறது.

    கடந்த வாரம் சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்களான அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய 2 கிணறுகளில் ஹவுதி படை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. கடந்த 3 மாதங்களில் 6 முறைக்கும் மேல் இது போல தாக்குதல் நடந்துள்ளது.

    அரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்!அரசியல் விழிப்புணர்வு இல்லை.. விஜய் சொன்னது எல்லாம் சரிதான்.. ஆதரவாக களமிறங்கிய சீமான்!

    எப்படி தாக்குதல்

    எப்படி தாக்குதல்

    ரேடார் கண்ணில் படாமல் மிகவும் தாழ்வாக சென்று தாக்கும் வகையில் இந்த டிரோன்களை பறக்க வைக்கிறார்கள். இதனால் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்துவது இயலாத காரியமாகிறது. இந்த தாக்குதல் நடந்து ஒரு வாரம் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் தாக்கப்பட்ட இடங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

    பாதிப்பு

    பாதிப்பு

    இப்போதைக்கு இங்கு உற்பத்தி தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள். இதனால் சவுதியின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 65 உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இந்த தாக்குதலில் மொத்தம் 5.7 மில்லியன் பேரல் எண்ணெய்கள் நாசம் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    விலை

    விலை

    இதனால் தொடர்ந்து தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் விலை 1.59 ரூபாயும், டீசல் விலை 1.31 ரூபாயும் உயர்ந்துள்ளது. கடந்த 2017ல் இருந்து பெட்ரோல் டீசல் விலையில் ஏற்பட்ட அதிகபட்ச உயர்வு இதுதான்.

    மிக மோசம்

    மிக மோசம்

    தினமும் 20-30 பைசா வீதம் பெற்று டீசல் விலை உயர்கிறது. சென்னையில் இப்போதே பெட்ரோல் 74 ரூபாய்க்கும், டீசல் 67 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த எண்ணெய் கிணறுகளில் இன்னும் உற்பத்தி தொடங்காத காரணத்தால் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Houthi rebel attack on Aramco plants increases petrol and diesel price to a new high.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X