ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து.. மக்கள் அச்சம்

Google Oneindia Tamil News

Recommended Video

    சவுதியில் எண்ணெய் நிறுவனத்தின் மீது விமானம் மூலம் தாக்குதல்.. பயங்கர தீவிபத்து-வீடியோ

    ரியாத்: அரேபியாவில் உள்ள ஆரம்கோ எண்ணெய் நிறுவனங்கள் மீது விமானம் மூலம் தீவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சவுதி அரேபியாவில் அப்குவைக் என்ற நகரத்தில் கிழக்கு மாகாணத்தில் எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலை உள்ளது. இதை சுருக்கமாக ஆரம்கோ என்பார்கள். இதுதான் உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையாகும்.

    Huge fires and explosions at Saudi Aramco oil facilities

    இங்கு பயங்கர வெடிசப்தத்துடன் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது. இங்கு 12 முறை குண்டுகள் வெடிக்கப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர்.

    இதனால் நிறுவனத்தை சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த பயங்கர தீவிபத்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த தீவிபத்தை ஆளில்லா விமானம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    ஆலைக்கு தீ வைத்த விமானம் குறித்தும் தீயை வைக்க வைத்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் ரியாத்திலிருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ள குரைஸ் எண்ணெய் வயலிலும் தீவிபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    English summary
    Massive fires have hit two Saudi Aramco oil facilities. Riyadh says the blazes were caused by drone attacks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X