ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாற்றில் முதல்முறை.. சமூக இடைவெளி.. 1000 பேருடன் நடந்த ஹஜ் யாத்திரை.. ஆச்சர்யமூட்டும் நிகழ்வு!

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் மக்கள் கஃபாவை வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவில் ஹஜ் புனித பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் மக்கள் கஃபாவை வரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் முக்கியமாக மத நிகழ்வுகள், மதம் சார்ந்த பண்டிகைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. அதிலும் பல லட்சம் மக்கள் வருடா வருடம் கலந்து கொள்ளும் ஹஜ் புனித யாத்திரை மொத்தமாக நிறுத்தப்பட்டது.

ஒருபக்கம் லாக்டவுன்.. இன்னொருபக்கம் சரியும் கொரோனா கிராப்.. சரியான பாதையில் தமிழகம்.. குட்நியூஸ்!ஒருபக்கம் லாக்டவுன்.. இன்னொருபக்கம் சரியும் கொரோனா கிராப்.. சரியான பாதையில் தமிழகம்.. குட்நியூஸ்!

 ஹஜ் நிறுத்தம்

ஹஜ் நிறுத்தம்

எல்லா வருடமும் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் சவுதி அரேபியா அரசு சர்வதேச பயணத்தை தடை செய்த காரணத்தால் ஹஜ் யாத்திரையும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது 1000 பேருடன் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மிக கடினமான விதிகளுடன் இந்த 1000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 தேர்வு செய்யப்பட்டனர்

தேர்வு செய்யப்பட்டனர்

நேற்று இந்த ஹஜ் யாத்திரை தொடங்கியது. மொத்தமாக 1000 பேரில் சிலர் சவுதியை சேர்ந்த குடிமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லோரும் 2 வாரம் முன்பே தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள். 2 வாரமாக இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

வயது

வயது

மொத்தம் 20-50 வயதுக்கு உட்பட்ட 1000 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்கள் எல்லோருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்பே இவர்கள் மெக்கா செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அதன்பின் இவர்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதிக்கப்பட்டார்கள்.

 மீண்டும் வந்தது

மீண்டும் வந்தது

இது மொத்தம் 5 நாள் புனித யாத்திரை ஆகும். இவர்கள் இந்த யாத்திரை முடிந்த பின்பும் தனிமைப்படுத்தப்படுவார்கள். தற்போது இந்த ஆயிரம் பேரும் எதிர் கடிகார முள் திசையில் கஃபாவை சுற்றி வருவார்கள். உள்ளே சமூக இடைவெளிவிட்டு இவர்கள் சுற்றி வருவார்கள். நீண்ட இடைவெளி மக்களுக்கு இடையே விடப்பட்டு இருக்கும்.

 புகைப்படம் வெளியானது

புகைப்படம் வெளியானது

பொதுவாக இங்கு மக்கள் கூட்டம் பெரிய அளவில் அலைமோதும். அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கே வருவார்கள். ஒரே நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் இங்கே சுற்றுவது வழக்கம். ஆனால் இப்போது, அதே கஃபாவில் 1000 பேர் சமூக இடைவெளியுடன் சுற்றுவது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

English summary
Saudi Arabia: Hajj took place with a huge social distancing amid pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X