ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 மடங்கு "வாட்" உயர்வு.. வளைகுடா கிங் சவுதிக்கே இந்த நிலையா? கொரோனாவால் ஏற்பட்ட பெரும் இழப்பு!

கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சவுதி அரேபியாவில் வாட் வரி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

ரியாத்: கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சவுதி அரேபியாவில் வாட் வரி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை மொத்தமாக சரிந்துள்ளது. இந்த சரிவு காரணமாக வளைகுடாவில் இருக்கும் எண்ணெய் வள நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

எண்ணெய் விலை மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது. இந்த சரிவில் இருந்து எண்ணெய் வள நாடுகள் மீண்டும் வர இன்னும் பல வருடங்கள் ஆகும் என்கிறார்கள்.

எடப்பாடி தொகுதியில் 90,000 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி... முதலமைச்சரின் சொந்த நிதியில் நிவாரணம் எடப்பாடி தொகுதியில் 90,000 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி... முதலமைச்சரின் சொந்த நிதியில் நிவாரணம்

வாட் வரி கொண்டு வரப்பட்டது

வாட் வரி கொண்டு வரப்பட்டது

இந்த நிலையில் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சவுதி அரேபியாவில் வாட் வரி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இந்த வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. சவுதி அரேபியா எண்ணெயை மட்டும் நம்பி இல்லாமல் மற்ற வருவாயையும் நம்பி இருக்கும் முடிவை எடுத்தது. இதனால் அங்கு தியேட்டர்கள் அனுமதிக்கப்பட்டது. அதோடு வாட் வரியும் கொண்டு வரப்பட்டது.

இப்போது அதிகரிப்பு

இப்போது அதிகரிப்பு

இந்த வாட் வரி 5% ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரே நாளில் 15% ஆக அங்கு வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு அரசு அதிகாரிங்களுக்கு வழங்கப்படும் 1000 ரியால் உதவி தொகை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018ல் இருந்து இந்த நிதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த நிதி உதவி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 1ல் இருந்து இந்த சட்டம் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி பாதிப்பு காரணம்

உற்பத்தி பாதிப்பு காரணம்

அந்த நாட்டில் தொடர்ந்து எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டதும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்ததும்தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். அங்கு பட்ஜெட் பற்றாக்குறை இந்த காலாண்டில் 9 பில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது. இதனால் அந்த நாடு கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. ஏற்றுமதி வருவாய் 22% சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் மதிப்பு 34 பில்லியன் டாலர் ஆகும்.

தயார் நிலை

தயார் நிலை

இது மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் சவுதியின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும் என்கிறார்கள். இதனால் சவுதி இப்போதே தயாராகி வருகிறது. கச்சா எண்ணெயை மற்றும் நம்பி இல்லாமல் மற்ற வருவாய் மீது கவனம் செலுத்த அந்த நாடு திட்டமிட்டுள்ளது. சுற்றுலா துறை மீது கவனம் செலுத்த சவுதி முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வருவது

என்ன கருத்து

என்ன கருத்து

இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவுகள் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். ஆனால் இப்போது இது அவசியமானது. நாம் ஒரு பொருளாதார சிறத்தன்மையை கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொருளாதார சரிவை சரி செய்ய இதுதான் ஒரே வழி என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Saudi Arabia increases the VAT by Thrice after economic hit in the country and low oil rate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X