ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செளதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பதிவு தொடக்கம்

Google Oneindia Tamil News

ரியாத்: செளதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பதிவை அந்த நாட்டு அரசு இணையம் மூலம் தொடங்கி உள்ளது.

தப்லீக் மாநாடு- கொரோனா பரவலுக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 36 வெளிநாட்டவர் விடுவிப்புதப்லீக் மாநாடு- கொரோனா பரவலுக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 36 வெளிநாட்டவர் விடுவிப்பு

செளதியில் தாக்கம் குறைந்தது

செளதியில் தாக்கம் குறைந்தது

செளதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,60,155. இங்கு மொத்தம் 6,069 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது செளதியில் கொரொனா பரவல் குறைந்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பு மருந்து

இந்த நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்தை பொது மக்களுக்கு வழங்கும் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. ஒவ்வொரு நாளும் கொரோனா தடுப்பு மருந்துகள் தொடர்பான பல்வேறு அடுத்த கட்ட முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

செளதியில் பதிவு தொடக்கம்

செளதியில் பதிவு தொடக்கம்

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டும் வருகிறது. இதேபோல் செளதி அரேபியாவிலும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

அனைவருக்கும் இலவசம்

அனைவருக்கும் இலவசம்

செளதியில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 65 வயதுக்கு மேற்பட்ட செளதி அரேபிய நாட்டவர் மற்றும் குடியேறியவர்களுக்கு கொடுக்கப்படும். கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்படும் ஒவ்வொரு கட்டத்திலும் அதனை பெறுபவரின் முந்தைய உடல்நிலை பாதிப்புகளையும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட உள்ளது.

English summary
Saudi Arabia also start registration for free Coronavirus vaccine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X