ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம்.. விமான போக்குவரத்துக்கு தடை போட்ட சவுதி

Google Oneindia Tamil News

ரியாத்: இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டுக்கும், தங்கள் நாட்டிலிருந்து இந்தியாவுக்கும் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளது சவுதி அரேபியா. கொரோனா நோய் பரவல் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி இந்த நடவடிக்கையை சவுதி அரேபியா எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு மட்டுமல்ல. பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தையும், தற்காலிகமாக நிறுத்துவதாக சவுதி அரேபிய உள்நாட்டு விமான ஆணையம் அறிவித்துள்ளது.

அதேநேரம் அரசு முறை பயணமாக வருகை தருவோருக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது.

Saudi Arabia suspends travel to and from India as cases rise

அக்டோபர் 4ம் தேதி முதல் துவங்க உள்ள உம்ரா வழிபாட்டுக்கு எமிரேட்ஸ் மக்கள் மட்டும் வருகை தருவதற்கு சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.

டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேரில் ஒருவராக பில்கிஸ் பாட்டி...யார் இவர்?டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 பேரில் ஒருவராக பில்கிஸ் பாட்டி...யார் இவர்?

உம்ரா பயணிகளுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் சவுதி அரேபியா தடை விதித்து வருகிறது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் அரபு எமிரேட்ஸை சேர்ந்த மக்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 6 ஆயிரம் பேர் மட்டுமே உம்ரா வழிபாட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்பு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் யாத்ரீகர்கள் இங்கு தொழுகை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

English summary
Saudi Arabia on Wednesday suspended air travel to and from India, Brazil and Argentina, in view of the COVID-19 pandemic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X