ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சவுதியில் காலாவதியான பணி விசாவை 3 மாதத்திற்கு இலவசமாக நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவு

Google Oneindia Tamil News

ரியாத்: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக சவுதி அரேபியா மன்னர் சல்மான், காலாவதியான இகாமாவின் (பணி விசா) செல்லுப்படியை நீட்டிக்க ஒப்பிதல் அளித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரின் விசாக்கள் காலாவதியாகி இருந்தாலும் அந்த விசாக்களை மூன்று மாத காலத்திற்கு எந்த கட்டணமும் இன்றி நீட்டித்துள்ளார்.

 saudi King orders 3-month free extension of iqama, reentry visas of expats

லாக்டவுன் காரணமாக ஏற்கனவே சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சவுதியை விட்டு இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் யாரும் வெளியறே முடியாமல் தவித்து வருகிறார்கள். இதனால் விசாக்கள் காலியான நிலையில் ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேற வழியில்லாமல் அங்கே தவித்து வருகிறார்கள். ஒருபக்கம் கொரோனா மறுபக்கம் வேலை இழப்பால், நாடு திரும்ப முடியாமல் தவிப்பு தவிப்புடன் வெளிநாட்டினர் அங்கு வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சவுதியில் வெளிநாட்டினரின் இகாமா மற்றும் சவுதியில் உள்ள வெளிநாட்டினரின் சுற்றுலா விசா ஆகியவை செல்லுப்படியாகும் கால அளவை மேலும் 3 மாதங்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி நீட்டித்து மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்!நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தனிநபர்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மற்றும் சவுதியின் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளைத் தணிக்க மன்னர் சல்மான் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

Recommended Video

    Trump அதிரடி முடிவு... யாருக்கு என்ன பாதிப்பு?

    சவுதி அரேபியாவில் அண்மையில் லாக்டவுன் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    English summary
    saudi King Salman has approved the extension of the validity of the expired iqama (residency permit) and exit and reentry visas of expatriates who are outside the Kingdom for a period of three months without any fee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X