ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீரென்று சவுதி சென்ற ஜப்பான் பிரதமர்.. ஈரான் குறித்து அவசர ஆலோசனை.. உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையாக உருவெடுக்கும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    உக்ரைன் விமானத்தை தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம்... ஈரான் ஒப்புதல் | Ukranian plane incident

    ரியாத்: ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையாக உருவெடுக்கும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

    ஈரான் - அமெரிக்கா இடையில் நிகழ்ந்து வரும் பிரச்சனை உலக நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது. இந்த சண்டையில் ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    விரைவில் இது உலகப் போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் டிரோன் தாக்குதல் நிகழ்த்திய அமெரிக்கா ஈரான் குவாட்ஸ் படை தளபதி சுலைமானியை கொலை செய்தது. இதற்கு பதிலடியாக ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியது.

    வெளிநாட்டு அழுத்தம்.. உள்ளுக்குள்ளேயே வெடித்த பெரும் மக்கள் புரட்சி.. கவிழும் நிலையில் ஈரான் அரசு!வெளிநாட்டு அழுத்தம்.. உள்ளுக்குள்ளேயே வெடித்த பெரும் மக்கள் புரட்சி.. கவிழும் நிலையில் ஈரான் அரசு!

    எங்கே சென்றார்

    எங்கே சென்றார்

    ஈரான் அமெரிக்கா இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் தற்போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று இருக்கிறார். மொத்தம் 5 நாள் பயணமாக அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். முதல் கட்டமாக இன்று, அவர் சவு தி அரேபியா சென்றார் . சவுதியில் முடி இளவரசர் முகமது பின் சல்மானை அவர் சந்தித்தார்.

    ஜப்பான்

    ஜப்பான்

    இரண்டு நாட்டு உறவுகள் குறித்து இவர்கள் இருவரும் விவாதித்தனர். அதை தொடர்ந்து ஈரான் அமெரிக்கா பிரச்சனை குறித்து பேசினார்கள். ஈரான் குறித்து முக்கிய விஷயங்களை இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதில் சவுதி அமெரிக்காவிற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாகவும் இவர்கள் ஆலோசனை செய்தனர்.

    ஷின்சோ அபே பேட்டி

    ஷின்சோ அபே பேட்டி

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்கா ஈரான் இடையே நடக்கும் சண்டை கவலை அளிக்கிறது. இது உலக அளவில் பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சிறிய சிறிய ராணுவ செயல்பாடுகள் கூட, பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.

    அமைதி முக்கியம்

    அமைதி முக்கியம்

    உலக அளவில் நிலவும் பொருளாதார நிலை போர் வந்தால் மோசமாக பாதிக்கும். ஏற்கனவே பல நாடுகளில் பொருளாதர நிலை மோசமாக இருக்கிறது. போர் வந்தால் இது இன்னும் மோசம் அடையும். உலக அளவில் இது நிலையற்ற தன்மையை உருவாக்கும்.

    சமாதானம் செய்யுங்கள்

    சமாதானம் செய்யுங்கள்

    இரண்டு நாடுகளும் இதனால் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு சமாதானமாக செல்ல வேண்டும். உடனே இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இரண்டு நாடுகளும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று, ஷின்சோ அபேகுறிப்பிட்டுள்ளார்.

    English summary
    The clash between Iran and the USA may lead unrest around the world says Japan PM in Saudi Arabia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X