ரியாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சவுதிக்கு படைகளை அனுப்பிய அமெரிக்கா.. திருப்பி தாக்க தயாராகும் ஈரான்.. ஷாக்கிங் திருப்பங்கள்!

சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அமெரிக்கா அங்கு படைகளை குவித்து வருகிறது.

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி அரேபியாவில் எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து அமெரிக்கா அங்கு படைகளை குவித்து வருகிறது.

ஏமன் மற்றும் சவுதி இடையிலான பிரச்சனை பெரிய அளவில் வெடித்துள்ளது. ஏமனில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஹவுதி போராளி குழுக்கள் சவுதியில் இருக்கும் எண்ணெய் கிணறுகள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது.

சவுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி மையங்களான அப்குவாய்க், குராய்ஸ் ஆகிய 2 கிணறுகளில் ஹவுதி படை டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனால் சவுதியின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை!இப்போது முடியாது.. சவுதி எண்ணெய் கிணறுகள் மீது நடந்த தாக்குதல்.. 7 நாட்களாக உயரும் பெட்ரோல் விலை!

என்ன தாக்குதல்

என்ன தாக்குதல்

ஆள் இல்லாத அதி நவீன டிரோன் இந்த தாக்குதல் நடக்கிறது. இந்த தொழில்நுட்பம் உலகில் சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. ஈரானிடமும் இந்த தொழில்நுட்பம் உள்ளது. ஈரான்தான் ஹவுதி நடத்தும் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. ஹவுதி போராளி குழுக்களுக்கு ஈரான் உதவுவதாக புகார் உள்ளது.

என்னஉதவி

என்னஉதவி

இந்த நிலையில் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவுதியில் இருக்கும் முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்து இருந்தது. சவுதி அரசும் இதற்காக அமெரிக்காவிடம் உதவி கேட்டது. தற்போது அதை ஏற்று சவுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது.

சவுதி

சவுதி

சவுதியில் முதற்கட்ட போன மாதமே அமெரிக்கா 20 ஆயிரம் படை வீரர்களை அனுப்பியது. தற்போது கூடுதலாக மேலும் படை வீரர்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது. இந்த வாரம் இன்னும் அதிகமாக படை வீரர்கள் அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்கா கூறி உள்ளது. இவர்களிடம் அதி நவீன் டிரோன் மற்றும் ரேடார் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

போர்

போர்

ஹவுதி போராளி குழுக்கள் நடத்தும் டிரோன் தாக்குதல்களை சமாளிப்பதே இவர்களின் டாஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் பதிலடி கொடுப்போம். எந்த விதமான தாக்குதலையும் நாங்கள் எதிர்கொள்ள தயார்.

பயம்

பயம்

அமெரிக்காவின் செயலை நாங்கள் இனியும் பொறுக்க மாட்டோம். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் திருப்பு தாக்குவோம், என்று ஈரான் தெரிவித்துள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் உண்டாகும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

English summary
The USA sends troops to Saudi after Houthi rebel attack on Aramco plants last week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X