• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரோகித் சர்மா செய்த பெரிய தப்பு.. பும்ராவை "மிஸ் யூஸ்" செய்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் தோற்க காரணம்

Google Oneindia Tamil News

அபுதாபி: ஜஸ்ப்ரிட் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா உரிய வகையில் பயன்படுத்தாததுதான் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.

  MI Vs KKR Match Highlights |MI அணியை சுக்குநூறாக்கிய KKR | IPL 2021

  தலைக்கு கீழே தங்க மூட்டை இருப்பது தெரியாமல், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறோமோ என்று கவலைப்பட்ட ஒருவரின் கதை போலத்தான் உள்ளது ரோகித் சர்மா செயல்பட்ட விதம்.

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ரோகித் சர்மா எடுத்த மோசமான முடிவு தொடர்பாகத்தான் கிரிக்கெட் வல்லுநர்களும், ரசிகர்களும் இப்படி பேசிக்கொள்கிறார்கள்.

  நிபந்தனை ஜாமீனில் மீரா மிதுன் ரிலீஸ்- எந்த சவுண்டும் இல்லை- விருட்டென காரில் ஏறி பறந்தார்!நிபந்தனை ஜாமீனில் மீரா மிதுன் ரிலீஸ்- எந்த சவுண்டும் இல்லை- விருட்டென காரில் ஏறி பறந்தார்!

  பினிஷிங் சரியில்லையேப்பா

  பினிஷிங் சரியில்லையேப்பா

  அபுதாபியில் நேற்று மும்பை இந்தியன்ஸ்-கேகேஆர் அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்தது மும்பை அணி. சிஎஸ்கே அணிக்கு எதிராக களமிறங்க முடியாத ரோகித் சர்மா நேற்று தனது வழக்கமான ஓப்பனிங் இடத்தில் இறங்கினார். டிகாக்-ரோகித் சர்மா ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. கேகேஆர் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்து சாதித்தார் ரோகித் சர்மா. ஆனால் ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு.. உன்கிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா.. என்ற பிரபல வடிவேலு டயலாக் போல மும்பை அணி பிற்பகுதியில் சொதப்பியது. கொல்கத்தா வீரர்கள் வீசிய ஸ்லோ பவுலிங்கை சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டும்தான், மும்பை அணியால் எடுக்க முடிந்தது.

  துவக்க பவுலர்

  துவக்க பவுலர்

  கேகேஆர் பேட் செய்ய வந்தபோது எல்லோருடைய கவனமும் பும்ரா மீதுதான் இருந்தது. இடைவேளையின்போது கூட பும்ராதான் ஓடி ஓடி பவுலிங் பயிற்சி செய்து வந்தார். டிவி சேனலும் அதைக் காண்பித்தது. முதல் ஓவரை பும்ரா வீசுவார். கேகேஆரை கட்டுப்படுத்துவார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் ஸ்கோர் குறைவானது. அதை பாதுகாக்க முதல் ஓவரே டெட்லி பவுலரை கொண்டு வந்து எதிரணியை பயமுறுத்த வேண்டும். இது பாலர் பாடம். ஆனால் ரோகித் சர்மா அதைச் செய்யவில்லை.

  முதல் ஓவரே மொத்தமும் போச்சே

  முதல் ஓவரே மொத்தமும் போச்சே

  முதல் ஓவரை நியூசிலாந்தைச் சேர்ந்தவரான வேகப்பந்து வீச்சாளர் டிரன்ட் பவுல்டுக்கு கொடுத்தார். ஓவரின் 2வது பாலே, அழகாக பிட்சில் நடந்து வந்து லெக் சைடில் இமாலய சிக்சர் விளாசினார் சுப்மன் கில். அந்த ஒற்றை ஷாட்டில் இருந்த அழகு, பயமின்மை, நேர்த்தி போன்றவை மொத்த மும்பை அணி பவுலர்களின் நம்பிக்கையையும் குலைத்து விட்டன.

   கிரீசை விட்டு இறங்கியிருப்பார்களா

  கிரீசை விட்டு இறங்கியிருப்பார்களா

  டிரண்ட் பவுல்ட் உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர்தான், ஆனால் அடிக்க முடியாத பவுலர் இல்லை. ஆனால் இதே இடத்தில் பும்ரா வீசியிருந்தால், கில் அல்ல, எந்த பேட்ஸ்மேனும் கிரீசை விட்டு இறங்கி வர பயந்திருப்பார்கள். காரணம், பும்ரா பந்தை பிட்ச் செய்த பிறகு பந்து எடுக்கும் வேகம்தான். கிரீசை விட்டு இறங்கி வந்தால், பும்ரா பவுலிங் வரும் வேகத்தை கணிக்க முடியாமல் அவுட்டாகும் வாய்ப்பு உண்டு என்பதால், பெரும்பாலும் உலகின் எந்த ஒரு பேட்ஸ்மேனும் பயந்து போய், கிரீசை தாண்டி வர மாட்டார்கள். குறைந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு பும்ராவை ரிசர்வ் மோடில் வைத்த ரோகித் சர்மா முடிவால், முதல் ஓவரிலேயே 15 ரன்கள் குவித்தது கேகேஆர்.

  3வது ஓவர்தான் பும்ராவிற்கு

  3வது ஓவர்தான் பும்ராவிற்கு

  அடுத்த ஓவராவது தவறை திருத்துவார் என்று பார்த்தால், மில்னேவிடம் பந்தை கொடுத்தார் ரோகித் சர்மா. அவரும் வாரி வழங்கி 15 ரன்களை கொடுத்து நடையை கட்டினார். 3வது ஓவர்தான் பும்ராவை கொண்டு வந்தார் ரோகித் சர்மா. அதற்கு கை மேல் பலன். கில் விக்கெட்டை பவுல்ட் முறையில் எடுத்தார் பும்ரா. அடுத்த ஓவரை பவுல்டிடம் கொடுத்த ரோகித் சர்மா அதற்கடுத்த ஓவரை பும்ராவிற்குத்தானே கொடுத்திருக்க வேண்டும், ஆனால் நல்ல உற்சாகத்தில் இருந்த பும்ராவுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் குர்னால் பாண்டியாவிடம் கொடுத்தார்.

  ஆரம்பமே அதிரடி

  ஆரம்பமே அதிரடி

  இப்படியாக மாறி மாறி முடிவை மாற்றியதன் விளைவாக முதல் 6 ஓவர்களில் 61 ரன்களை குவித்து வலுவான அடித்தளம் போட்டு விட்டது கேகேஆர். எதிரணிக்கு தன்னம்பிக்கை வந்து விட்ட பிறகு எந்த பவுலராக இருந்தாலும் அடிதான் வாங்க வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தில் 7வது ஓவருக்குதான் மறுபடி பும்ராவை கொண்டு வந்தார் ரோகித் சர்மா. அதற்குள்ளாக எல்லாம் காலம் கடந்து விட்டது. வெங்கடேஷ் ஐயர் ஃபுல் பார்மிற்கு வந்திருந்தார். பிறகு நடந்தது எல்லாமே கேகேஆர் ரசிகர்கள் கை தட்டல் மட்டும்தான். 15.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி கலக்கியது கேகேஆர்.

  பும்ரா ஏன் வரவில்லை?

  பும்ரா ஏன் வரவில்லை?

  பும்ராவை ரோகித் சர்மா முதலிலேயே பயன்படுத்தாமல் இருக்க காரணம், அவரை கடைசி கட்ட ஓவர்களில் பயன்படுத்தலாம் என்பதுதான். யார்க்கர் மற்றும் ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட்டான பும்ராவை, டெத் ஓவர்களில் கையாளுவது சிரமம். ஒரு கேப்டனாக ரோகித் சர்மா மனதில் எப்போதும் இதுதான் ஓடுகிறது. ஆனால் குறைந்த ரன்களை ஸ்கோர் போர்டில் வைத்துக் கொண்டு கடைசி ஓவர் வரை காத்திருப்பது என்பது, கடைசி 5 ஓவரில் 40 ரன்கள் அடிக்க வேண்டிய நேரத்தில் களம் கண்டுவிட்டு, சிங்கிள்களாக ஓடுவதும், டாட் பால்களாக்குவதுமாக நேரத்தை வீண் செய்து விட்டு, கடைசி ஓவரில் 20 ரன் அடிக்க வேண்டிய நிலைக்கு கொண்டு வந்து விடும் தோனியின் வியூகத்திற்கு எந்த வகையிலும் குறைந்ததில்லை. எனவே வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள மும்பை இனியாவது தவறை திருத்துமா என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

  English summary
  Mumbai Indians captain Rohit Sharma's misuse of Jasprit Bumrah has been cited as the main reason for the team's defeat against KKR.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X