சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி ராமர் கோவில்... சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை அனுப்பியது பாஜக, ஆர்எஸ்எஸ்!

Google Oneindia Tamil News

சேலம்: அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் அனுப்பி வைத்தனர். முன்னதாக இந்த புனித வெள்ளி செங்கல்லுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

Recommended Video

    சேலத்தில் இருந்து 17.4 கிலோ வெள்ளி செங்கலை அயோத்திக்கு அனுப்பியது பாஜக, ஆர்எஸ்எஸ்! - வீடியோ

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அங்கு உலகின் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட உள்ளது.

    17.4kg silver brick from TN to Ayodhya Ram Temple

    இந்த ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5-ந் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த அடிக்கல் நாட்டு விழாவில் நேரடியாக பங்கேற்க உள்ளார்.

    ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ராமர் கோயில் பூமி பூஜைக்காக சேலத்தில் இருந்து வெள்ளி செங்கல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    படுவேகமாக பரவும் கொரோனா.. அலறும் அமெரிக்கா.. நிமிஷத்துக்கு ஒரு உயிர் போவதால் பரபரப்பு!படுவேகமாக பரவும் கொரோனா.. அலறும் அமெரிக்கா.. நிமிஷத்துக்கு ஒரு உயிர் போவதால் பரபரப்பு!

    17.4 கிலோ எடை கொண்ட இந்த வெள்ளி செங்கல் ராமர் கோயில் பூமி பூஜைக்காக சேலத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சேலம் மரவனேரியில் வெள்ளி செங்கலுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    17.4kg silver brick from TN to Ayodhya Ram Temple

    பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வெள்ளி செங்கல்லுக்கு பூஜை செய்தனர். சேலத்தில் தயாரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்ட இந்த வெள்ளி செங்கலானது வரும் 2-ந் தேதி அயோத்தியை சென்றடைய உள்ளது. வரும் 3-ந் தேதி கோவில் நிர்வாக கமிட்டியிடம் வெள்ளி செங்கல் ஒப்படைக்கப்படும் என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    English summary
    17.4kg silver brick sent from Salem, Tamilnadu to Ayodhya Ram Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X