சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேலும் 3 கிலோ தங்கம் சிக்கியது.. சிக்கலில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர்.. ஏன்?

Google Oneindia Tamil News

சேலம் : தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாச்சலம் வீட்டில் நடந்த சோதனையில் மேலும் 3 கிலோ தங்கம் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெங்கடாச்சலத்தின் லாக்கர்களை திறந்து சோதனை செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்துள்ளார்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.

 பழனி அருகே அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்- 3 பேர் பலி; 20 பேர் படுகாயம் பழனி அருகே அரசு பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்- 3 பேர் பலி; 20 பேர் படுகாயம்

இவர் தனது பணி காலத்தில் ஏராளமான நிறுவனங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு தடையில்லா சான்றிதழ்கள் அளித்ததாக புகார்கள் எழுந்தன. இவர் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு 60 தொழில் நிறுவனங்களுக்கு அவசர, அவசரமாக தடை இல்லா சான்று வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கடாச்சலம், ஊழல் வழக்கில் சிக்கி உள்ளார்.

லஞ்ச புகார்கள்

லஞ்ச புகார்கள்

இந்த நிலையில் வெங்கடாச்சலம் மீதான லஞ்ச புகார்கள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படியே வெங்கடாச்சலத்திற்கு சொந்தமான சென்னையில் உள்ள வீடு மற்றும் பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நேற்று நடத்தினர்.

சோதனை

சோதனை

சென்னையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வேளச்சேரியில் உள்ள அவரது வீடு, பண்ணை தோட்டம் மற்றும் சொந்த ஊரான, சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, அம்மம்பாளையத்தில் உள்ள வீடு உள்பட ஐந்து இடங்களில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

சேலத்தில் சோதனை

சேலத்தில் சோதனை

மேலும் வெங்கடாச்சலத்தின் சொந்த ஊரான அம்மம்பாளையம் நடுவீதியில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று மதியம் 2 மணிக்கு சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் நரேந்திரன் தலைமையில் போலீசார் சோதனையில் நடத்தினர். வீட்டில் ஒவ்வொரு அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இரவு வரை நீடித்தது,.

13 லட்சம் பணம்

13 லட்சம் பணம்

சோதனையின் முடிவில் வீட்டில் இருந்து ஆவணங்கள், சொத்துகள் எதுவும் பறிமுதல் செய்யவில்லை. இருப்பினும் ரூ. 13.5 லட்சம் ரொக்கப்பணம், மற்றும் 2கோடி மதிப்பிலான 6 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்ட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று நடத்திய சோதனையில் மேலும் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே வெங்கடாச்சலத்தின் லாக்கரை ஆராய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் முடிவு செய்துள்ளனர்,

வழக்கு

வழக்கு

இதனிடையே நேற்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில். ப்பில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான A.V.வெங்கடாசலம், IFS (Retired) என்பவர் Member Secretary TNPCB; சென்னை 4.10.2013 to 29.07.2014, Member Secretary SEIAA (2017 - 2018), தலைவர் TNPC8, சென்னை (27/09/2019) முதல் 23/09/2021 வரை) மீது குற்றம் மற்றும் ஊழல் முறைகேடு சம்பந்தமாக 23/09/2021 ஆம் தேதியன்று சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் C.No. 1721, U/S 13(2) tw 13(1) (c), 13(1) (d) Prevention of Corruption Act 1968 and 7: 13(2) riw 13(1)(n) of Prevention of Corruption Act 1988 as Amended in 2018- ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சோதனையில் கிடைத்தது

சோதனையில் கிடைத்தது

இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், கிண்டி சென்னை -600032 உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினரால் நேற்று (23/09/2021) தேதியன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ரூபாய் 13.5 லட்சம் ரொக்கம், இதுவரை சுமார் 6.5 கிலோ தங்கம் (தோராயமாக சுமார் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் மதிப்பு) மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பணம் ரூபாய் 13.5 லட்சம் மற்றும் இவ்வழக்கிற்குச் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

English summary
Another 3 kg of gold was found during dvac raid of the house of Tamil Nadu Pollution Control Board Chairman Venkatachalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X