ப்பா.. செம்ம டான்ஸ்! கல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம்! நம்ம ரம்யா பாண்டியனா இது! உற்சாக செல்ஃபி..!
சேலம் : சேலத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல நடிகையும் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் கல்லூரி மாணவருடன் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜோக்கர், டம்மி பட்டாசு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா காலத்தில் லாக் டவுன் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோ ஷூட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஹீரோக்கள் அல்ல.. இறந்தவர்களும் தமிழர்கள்தானே.. கார்த்தி சிதம்பரம்
தொடர்ந்து தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதும் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது.

நடிகை ரம்யா பாண்டியன்
தற்போது தமிழில் இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் மலையாளத்தில் பிரபல நடிகர் மம்முட்டி நடிப்பில் உருவாகும் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். 'ஜோக்கர்' படத்தின் மூலமாவே தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன், இந்த படத்தை தொடர்ந்து நடித்த ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சர்யப்படுத்தியவர்.

பிக் பாஸ் பிரபலம்
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய 32 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ரம்யா பாண்டியனை பலரும் வாழ்த்தினர். சினிமா, டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி நிகழ்ச்சிகளும் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் கல்லூரி மாணவர்களுடன் நடிகை ரம்யா பாண்டியன் குத்தாட்டம் போட்டதோடு, எங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என மாணவர்கள் வற்புறுத்திய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தனியார் கல்லூரி நிகழ்ச்சி
சேலம் அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரபல நடிகை ரம்யா பாண்டியன் வந்திருந்தார். அவர் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மேடையில் பீஸ்ட் திரைப்படத்தின் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு மாணவர்களுக்கு நிகராக போட்டிப்போட்டு நடனமாடினார்..

மாணவர்களுடன் நடனம்
இவரின் நடனத்தை மாணவர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கைதட்டி விசிலடித்து ஆரவாரம் செய்து ரசித்தனர். தொடர்ந்து தங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள் கோஷம் எழுப்பிய நிலையில் செய்வது அறியாத திகைத்த ரம்யா பாண்டியன் சிறிது சலசலப்புக்கு பிறகு கல்லூரி மாணவ மாணவிகளுடன் செல்ஃபி எடுத்தார். இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக கல்லூரியை விட்டு கிளம்பினார் ரம்யா பாண்டியன்.