சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக 49வது ஆண்டு விழா - சொந்த ஊரில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றினார்

அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சி கொடியேற்றினார்.

Google Oneindia Tamil News

சேலம்: அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் கட்சியின் கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் ஆம் தேதி அதிமுகவை தொடங்கினார். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியை கட்டிக்காத்தார் ஜெயலலிதா. அவரது மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கட்சியை பாதுகாத்து வருகின்றனர்.

AIADMK 49th Anniversary - Chief Minister Palanisamy flagged off in his hometown

தனக்குப் பிறகும் 200 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சிக்கட்டிலில் இருக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா. அதிமுக இன்று தனது 49 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதிமுக தொடக்கவிழாவை தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரில் அதிமுகவின் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். தாயார் மறைவினால் சேலம் சென்றுள்ள பழனிச்சாமி அங்கேயே கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திலும் இந்த விழா கோலாகலமாக கொண்டப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் தலைமையில் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி ராயப்பேட்டை பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

பொன்விழா கொண்டாட உள்ள அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர தேர்தல் பணிகளை தொடங்குங்கள் என்று நேற்றைய தினமே அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Chief Minister Edappadi Palanisamy hoisted the party flag in his hometown of Siluvampalayam on the occasion of the 49th anniversary of the AIADMK. He also paid floral tributes to the portraits of MGR and Jayalalithaa placed there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X