சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

24 வயசு டிம்பிள்.. ஏமாந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள்.. நடந்தது என்ன.. நள்ளிரவில் சேலத்தில் பரபரப்பு

இளம்பெண் மீது பணமோசடி புகார் தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சேலம்: மொத்தம் 10-க்கும் மேற்பட்டஇளைஞர்களை டிம்பிள் என்ற இளம்பெண் ஏமாற்றி விட்டாராம்.. வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த இந்த பெண்ணை பாதிக்கப்பட்ட இளைஞர்கள் காரில் கடத்திவிட்டதாக, டிம்பிளின் தாய் தந்த புகாரால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சையை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகள் டிம்பிள்.. 24 வயதாகிறது.. சென்னையில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நிறைய பேரிடம், தனக்கு தெரிந்த ஒருவர் மூலம் தனியார் விமான நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பண மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.. சேலம், நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த நிறைய இளைஞர்கள் லட்சக்கணக்கில் டிம்பிளிடம் பணம் தந்து ஏமாந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

டிம்பிள்

டிம்பிள்

இந்த இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை.. டிம்பிள் பணத்தையும் அவர்களுக்கு திருப்பி தரவில்லை.. தொடந்து டிம்பிளை ஏமாந்துபோன இளைஞர்கள் பணம் கேட்டு கொண்டே இருந்தனர். இதனால், நேற்று சேலம் இரும்பாலை பகுதியில் தனக்கு சொந்தக்காரர் இருப்பதாகவும், அங்கு வைத்து எல்லாருக்கும் பணத்தை செட்டில் செய்துவிடுவதாகவும் டிம்பிள் சொல்லி உள்ளார்.

பணம்

பணம்

இதை நம்பி 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் வந்தனர்.. அதேபோல டிம்பிளும், அவரது குடும்பத்தினரும் வந்தனர்.. அப்போது திடீரென டிம்பிள், தஞ்சாவூரில்தான் பணம் இருக்கு, போய் எடுத்து வருகிறோம் என்றார்.. உடனே இளைஞர்கள் நாங்கள் கூட்டி செல்கிறோம் என்று சொல்லி, டிம்பிளையும், அவரது தந்தையையும், காரில் ஏற்றி கொண்டு கிளம்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே டிம்பிளின் அம்மா, இரும்பாலை போலீசில் புகார் ஒன்று தந்தார்..

கடத்தல்?

கடத்தல்?

அதில் தனது கணவர், மகளை இளைஞர்கள் சில பேர் காரில் கடத்தி சென்றதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விஷயம் இளைஞர்களுக்கு தெரியவந்தது.. இதையடுத்து, நள்ளிரவில் சேலம் கமிஷனர் அலுவலகத்துக்கு அந்த பெண்ணை இளைஞர்களே அழைத்து வந்துவிட்டனர்.. அவர்களிடம் இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தினர்.

தஞ்சை

தஞ்சை

அதேபோல, டிம்பிள், அவருடைய பெற்றோரிடமும் விசாரணை நடந்து வருகிறது. "பணம் தஞ்சாவூரில் இருப்பதாக சொன்னதால்தான் காரில் கூட்டிட்டு போனோம்.. கடத்தவில்லை.. புகார் தந்தது தெரிந்ததும் கூட்டிவந்து விட்டுவிட்டோம்.. எங்க பணத்தை திருப்பி தர வேண்டும்" என்று இளைஞர்கள் கேட்டுக் கொண்டனர்.

அறிமுகம்

அறிமுகம்

ஆனால் இவ்வளவு விஷயத்தையும் டிம்பிள் மறுக்கிறராம்.. தான் பணமே வாங்கவில்லை.. வேலை விஷயமாக தெரிந்தவர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தேன்.. அவர் வேண்டுமானால் பணம் வாங்கியிருக்கலாம்.. நான் வாங்கவே இல்லை" என்று சொல்கிறாராம். இதில் யார் பக்கம் உண்மை என்று தெரியவில்லை.. ஆனால் பெண்ணை கடத்தியதும், நடுராத்திரி கொண்டு வந்து விட்டதும்.. அவர்களிடம் போலீசார் விடிய விடிய விசரணை நடத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
chennai Airline female employee cheated case near salem and police inquiry is going on
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X