சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏற்காட்டில் புதிய அசைவ ஹோட்டல்.. டூவீலர் மாடல் சீட்.. டேபிள்களில் கேம்கள்.. சிக்கன் பிரியாணி ரூ 70!

Google Oneindia Tamil News

சேலம்: பைக் ரைடர்களை அபரிமிதமாக கொண்ட ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில் உண்மையான பைக்குகளை இருக்கைகளாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இங்கு சிக்கன் பிரியாணி ரூ 70-க்கு கிடைக்கும்.

Recommended Video

    ஏற்காட்டில் புதிய அசைவ ஹோட்டல்.. டூவீலர் மாடல் சீட்.. டேபிள்களில் கேம்கள் - வீடியோ

    கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அரசன் என்றழைக்கப்படுவது சேலம்-ஏற்காடு சுற்றுலா தலம். சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கிய இடம் பிடிக்கிறது இந்த ஏற்காடு சுற்றுலா தலம்.

    இங்கு ஆண்டு முழுவதுமே இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சேலம் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம்- ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எப்போதும் இருக்கும் என்றால் அது மிகையாகாது.

    இலங்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனைஇலங்கையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை

    சுற்றுலா பயணிகள்

    சுற்றுலா பயணிகள்

    மலைப்பாதைகளில் ஆங்காங்கே காணப்படும் நீர்வீழ்ச்சிகள், மலைப்பாதையின் பயணத்தின்போது மேனியை வருடிச் செல்லும் குளிர்காற்று, அங்கு காணப்படும் மலை முகடுகள் அவ்வப்போது கூடி மறையும் மேகமூட்டம் உள்ளிட்டவைகளால் ஆண்டு முழுவதும் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகவே இருக்கும்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    இது மட்டுமல்லாது ஏற்காட்டிற்கு சென்று அடைந்தவுடன் அங்குள்ள சுற்றுலா பகுதிகள் அனைத்திலும் இதேபோன்ற சீதோசன நிலை எப்பொழுதுமே நிலவி வருவதால் அங்குள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிறைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையை மட்டுமே நம்பி கடை வைத்திருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.

    பெருமை சேர்க்கும் ஏற்காடு

    பெருமை சேர்க்கும் ஏற்காடு

    இது ஒருபுறமிருக்க சேலத்திற்கு பெருமை சேர்க்கும் ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை காட்டிலும், பைக் ரைடர்கள் என்றழைக்கப்படும் இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகளில் வருபவர்களே அதிகம். இவர்கள் குழு குழுவாக அவ்வப்போது பல்வேறு வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏற்காட்டிற்கு வந்து புத்துணர்ச்சியுடன் திரும்பி செல்வது வழக்கமாகவே இருந்து வருகிறது.

    அசைவ பிரியர்கள்

    அசைவ பிரியர்கள்

    நிலைமை இப்படி இருக்க இந்தப் போட்டி மிகுந்த சமுதாயத்தில் தாங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு யுக்திகளை கையாண்டு தத்தம் சார்ந்த தொழிலில் வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதை நம் தற்போதும் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். அந்த வகையில், ஏற்காட்டிற்கு வருகை இருசக்கர மற்றும் மிதிவண்டி பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சேலம் ஏற்காடு மலை அடிவாரமான சின்னகொல்லப்பட்டி பகுதியில் "மகிழ்வித்து மகிழ்" என்ற பெயரில் அசைவ உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

    திறப்பு விழா

    திறப்பு விழா

    இந்த அசைவ உணவகத்தின் சிறப்பு என்னவெனில் உணவகத்திற்குள் நுழைந்தவுடனேயே எங்கு நோக்கிலும் இருசக்கர வாகனங்கள் போன்ற இருக்கைகள் காணப்படுகின்றன. இந்த உணவகத்தின் உரிமையாளரும் சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சக்திவேலின் சகோதரர் சங்கர் தலைமையில் இந்த உணவகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

    அலங்காரம்

    அலங்காரம்

    இந்த வித்தியாசமான அசைவ உணவகத்தின் சிறப்புகள் குறித்து உணவகத்தின் உரிமையாளர் சங்கர் நம்மிடையே கூறுகையில், இந்த போட்டி மிகுந்த சமுதாயத்தில் தாங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் பல்வேறு உத்திகளை கையாள வேண்டும் என்பது அடிப்படையில் இந்த உணவகம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    டோர் டெலிவரி

    டோர் டெலிவரி

    இது அவர்களைக் கவர்ந்து இழுக்கும். ஒவ்வொரு டேபிளிலும் ஒரு கேம்கள் உள்ளன. அவற்றை விளையாடி வெற்றி பெற்றால் பில் தொகையில் 12 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்றார். இரண்டு நாட்களுக்கு சிக்கன் பிரியாணி 48 ரூபாய்க்கும், கிரில்டு சிக்கன் 99 ரூபாய்க்கும் வழங்க உள்ளோம். குறிப்பாக தொலைபேசி மூலம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்தால் இலவச டோர் டெலிவரியும் செய்வோம் என தெரிவித்தார்.

    சுற்றுலா பயணிகள்

    சுற்றுலா பயணிகள்

    மேலும் வரும் திங்கள்கிழமை முதல் சிக்கன் பிரியாணி ரூ. 70, கிரில்டு சிக்கன் முழு கோழி ரூ350 க்கு விற்பனை செய்யப்படும். இதுபோன்று ஏராளமான அசைவ வகைகள் இங்கு தயார் செய்யப்பட்டு பொதுமக்களுக்கும் ஏற்காடு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது. இதனிடையே சம்பந்தபட்ட உணவகத்தில் நன்கு ஓடக்கூடிய ஒரு ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தை சுவற்றில் நிற்க வைத்து அதன் அருகே சென்று ஏதாவது கேட்டால் முகப்பு விளக்கு தொடர்ந்து எரியும் வண்ணம் செய்திருக்கிறார்கள்.

    English summary
    A non vegetarian hotel opened in Yercaud to lure two wheeler motorist and cyclists. It has two wheeler type of cycles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X