சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆத்தூர் அலப்பறை... நீ என்ன செய்வேன்னு பார்க்கிறேன்... அதிமுக எம்.எல்.ஏ.வை தெறிக்கவிட்ட விவசாயி..!

Google Oneindia Tamil News

சேலம்: முதலமைச்சரின் சொந்தமாவட்டமான சேலத்தில் அதிமுக எம்.எல்.ஏ. ஒருவருக்கும் விவசாயிக்கும் இடையே நடந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாம் எதிர்ப்பது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்று தெரிந்தும் தில்லாக நின்று தெறிக்கவிட்டுள்ளார் 70 வயதை கடந்த விவசாயி ஒருவர்.

விளைநிலத்திற்கு வேலி அமைக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட இந்த வாக்குவாதம் இப்போது காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் முடியட்டும்... வட்டியும் முதலுமாக வச்சுக்கறேன்... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!சட்டமன்றத் தேர்தல் முடியட்டும்... வட்டியும் முதலுமாக வச்சுக்கறேன்... மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

ஆத்தூர் தொகுதி

ஆத்தூர் தொகுதி

சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சின்னதம்பி. இவரது சொந்த ஊரான ராமநாயக்கன் பாளையத்தில் விளைநிலத்திற்கு வேலி அமைக்கும் விவகாரத்தில் பக்கத்து தோட்டத்துக்காரருடன் மோதல் ஏற்பட்டிருக்கிறது. தனது வயல்காட்டிற்கு செல்லும் பாதையை அடைத்து பக்கத்து தோட்டக்காரர் வேலி அமைக்கிறார் என்பது சின்னதம்பி எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டு.

வாக்குவாதம்

வாக்குவாதம்

சின்னதம்பி எம்.எல்.ஏ. நேற்று தனது தோட்டத்துக்கு சென்ற போது பாதை அடைக்கப்பட்டு கல் நடப்பட்டிருந்ததை கண்டு கோபம் அடைந்தார். உடனடியாக இது குறித்து பக்கத்து தோட்டத்து விவசாயியிடம் கேட்டார். அவர் அளித்த பதிலைக் கேட்டு ஆவேசமடைந்த சின்னதம்பி ஆபாச வார்த்தைகளில் விவசாயியை அர்ச்சித்தார். மேலும், போலீஸுக்கு போன் போட்டுள்ளதாகவும் இப்போது வந்து உன்னை என்ன செய்யப் போகிறார்கள் பார் எனவும் கூக்குரலிட்டார்.

என்ன செய்ய முடியும்

என்ன செய்ய முடியும்

எம்.எல்.ஏ. சின்னதம்பி ரத்தக் கொதிப்பு வரும் அளவுக்கு டென்ஷனான நிலையில் கத்திக்கொண்டு இருந்ததை பார்த்த விவசாயி, உன்னால் என்னை என்ன செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பியதோடு அரசியலுக்கு போவதற்கு முன் உன்னிடம் நல்ல டவுசர் கூட இருந்ததில்லை, இப்போது வந்து என்னிடம் பேசுகிறாயா என கூலாக விமர்சித்தார். இதைக் கேட்டு மேலும் கோபமடைந்த சின்னதம்பி எம்.எல்.ஏ. தாட் பூட் என மேலும் குதிக்கத் தொடங்கினார்.

மிரட்டல்

மிரட்டல்

இதனை படம் பிடித்த ஒருவரை நோக்கி, கடப்பாறை எடுத்துக்கொண்டு வருகிறேன், அப்ப படம் புடி என மிரட்டியதோடு அங்கு வேடிக்கை பார்த்தவர்களையும் விரட்டியடித்தார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

English summary
Argument between Admk MLA Chinnathambi and farmer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X