சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு கிலோ கோழிக்கறியை சாப்பிட்டு விட்டு.. மாணவி கொலை.. ஆத்தூர் பயங்கரம் !

Google Oneindia Tamil News

ஆத்தூர்: ஆத்தூரில் மாணவியை இளைஞர் கொலை செய்தது ஏன் என்று போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி தெற்குகாடு மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிவேல். இவரது மகள் ராஜலட்சுமி (14). 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அவரை நேற்று முன் தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் கார்த்திக் (எ) தினேஷ்குமார் (26) அரிவாளால் துடிக்க துடிக்க வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டார். அவரை பிடித்து பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.

தொல்லை

தொல்லை

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தினேஷ்குமார் பல திடுக் தகவல்களை கூறியுள்ளார். அதில் ராஜலட்சுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவர் பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார்.

ராஜலட்சுமி

ராஜலட்சுமி

இது போல் தினமும் வந்து தொல்லை செய்தால் தனது தந்தையிடம் தெரிவித்துவிடுவதாக ராஜலட்சுமி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் குமார், ராஜலட்சுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தண்டவாளத்தில்

தண்டவாளத்தில்

இதுதொடர்பாக தினேஷ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது அவர் என்னை கொன்று விடுங்கள். நான் வெளியில் சென்றால் வேறு யாரையாவது கொன்றுவிடுவேன். என்னை ரயில் தண்டவாளத்தில் படுக்க வையுங்கள் என்று கூறியுள்ளார்.

விசாரணை

விசாரணை

இந்நிலையில் தினேஷ்குமாருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவியும் செல்வதரணிஷ் என்ற மகனும் உள்ளனர். மகனையும் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் தினேஷ்குமார் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்துள்ளார். அப்போது உறவினர்கள் தடுத்ததால் அவரை விட்டுவிட்டார். அவர் சைக்கோவா இல்லை அது போல் நடிக்கிறாரா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மதுபோதையில் கொலை

மதுபோதையில் கொலை

ராஜலட்சுமி கொலை செய்யப்பட்ட நாளன்று ஒரு கிலோ கோழிக்கறி வாங்கி வந்து மது குடித்துவிட்டு ஒரு கிலோ முழுவதையும் சாப்பிட்டு விட்டு போதையில் ராஜலட்சுமியின் வீட்டுக்கு சென்றதாக தினேஷின் மனைவி தெரிவித்துள்ளார். மேலும் எப்போதும் ஏதாவது முணுமுணுத்தபடி இருப்பார் என்றும் சுடுகாட்டில் சென்று படுத்துக் கொள்வேன் என்றும் கூறுவார் என்றும் மனைவி கூறியுள்ளார்.

English summary
Accused who arrested in connection with Athur Student Murder case gives statement in police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X