சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெயலலிதா சிறையில் இருந்த போது எடப்பாடி செய்த துரோகம் கொஞ்சமா நஞ்சமா.. உடைக்கும் புகழேந்தி!

Google Oneindia Tamil News

சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்த போது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்கள் குறித்து விரைவில் வெளியிடப்படும் என பெங்களூர் புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்த பெங்களூர் புகழேந்தி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் பக்கம் சென்றார். அங்கு சில நாட்கள் இருந்த நிலையில் டிடிவி தினகரனுடனான மோதல் போக்கால் அவர் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினார்.

இதையடுத்து அப்போது அதிமுகவுடன் கூட்டணியிலிருந்த பாமகவை ஒரு டிவி விவாதத்தில் புகழேந்தி விமர்சித்ததை அடுத்து அவரை ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியை விட்டே நீக்கினர்.

தீயசக்தி எடப்பாடி! பல ரகசியங்கள் இருக்கு.. பார்ட் பார்ட்டா வெளியிட போறேன்! பகீர் கிளப்பும் புகழேந்திதீயசக்தி எடப்பாடி! பல ரகசியங்கள் இருக்கு.. பார்ட் பார்ட்டா வெளியிட போறேன்! பகீர் கிளப்பும் புகழேந்தி

அதிமுகவின் ஒற்றைத் தலைமை

அதிமுகவின் ஒற்றைத் தலைமை

இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான பஞ்சாயத்து ஏற்பட்ட போது ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்த புகழேந்தி அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அன்று முதல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இவர் எடப்பாடி பழனிசாமியையும் முன்னாள் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

 சேலத்தில் பெங்களூர் புகழேந்தி

சேலத்தில் பெங்களூர் புகழேந்தி

இந்த நிலையில் சேலத்தில் பெங்களூர் புகழேந்தி கூறுகையில், அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், செம்மலை போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நின்று எப்படி வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதே எனக்கு தெரிவில்லை. எடப்பாடி பழனிசாமியை யாருமே ஏற்கவில்லை.

ஜாதி பெயர்

ஜாதி பெயர்

ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்கிறார்கள். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் என்றாவது ஜாதி பெயரை சொல்லி அரசியல் பேசியுள்ளனர்களா? எடப்பாடி பழனிசாமியின் பின்புலமாக யார் உள்ளார்கள் என்பதும் யார் சொல்லி அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது பொதுவெளியில் வரும்.

ஜெயலலிதா சிறை

ஜெயலலிதா சிறை

ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களை விரைவில் வெளியிடுவோன். எடப்பாடி பழனிசாமி தைரியம் இருந்தால் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி தொகுதியில் வென்று காட்ட முடியுமா? நானும் போட்டியிடுகிறேன் யார் வெல்கிறார்கள் என்பதை பார்ப்போம். இவ்வாறு பெங்களூர் புகழேந்தி பேசினார். புகழேந்தி சேலத்தில் பேட்டி அளித்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும் சேலத்தில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். மதுரைக்கு வராதீர் என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக யாரோ போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Bengaluru Pugalendi says that Edappadi Palanisamy had done betrayal of trust activities when Jayalalitha was in prison.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X