சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னென்னோ பண்ணி பார்த்தாச்சு.. வாயே திறக்காத கொள்ளையர்கள்.. வெறுப்பில் சேலம் போலீஸார்!

Google Oneindia Tamil News

Recommended Video

    என்ன செய்தாலும் விசாரணையில் வாய் திறக்காத கொள்ளையர்கள்- வீடியோ

    சேலம்: 4 நாள் ஆகிறதாம்... ரயிலில் இருந்து கொள்ளையடித்த பணத்தை எங்கே கொண்டு போனார்கள், ரயில் பெட்டியை எப்படி வெட்டினார்கள் என்பது குறித்து கைதான கொள்ளையர்கள் வாயே திறக்கவே இல்லை என சிபிசிஐடி போலீசார் உச்சக்கட்ட வெறுப்பில் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 2016-ம் ஆண்டு நாடே வியந்து அதிர்ச்சியுறும் வகையில் சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ஓட்டையை போட்டு கொள்ளை நடந்தது. ரூ.5.78 கோடியை பக்கவாக பிளான் பண்ணி ரயில்வே போலீசார், சிபிசிஐடி போலீசார் என அனைவரையுமே திணறடித்துவிட்டனர் கொள்ளையர்.

    [புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு.. இருவர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு ]

    இஸ்ரோ உதவி

    இஸ்ரோ உதவி

    பிறகு ஒருவழியாக இஸ்ரோ உதவி கொண்டு 2 வருஷம் கழித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 7 பேரை கைது செய்தனர். இவர்கள் கைதானபோதே எங்கிருந்து எப்படி ரூட் போட்டு கொள்ளையடித்தார்கள் என்ற விவரத்தை வாக்குமூலமாக சொன்னார்கள். ஆனாலும் கொள்ளையின் முழு விவரத்தை சொல்லவில்லை. இதனையடுத்து இவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கொள்ளையர்களை 14 நாளில் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சிறையில் அடைப்பு

    சிறையில் அடைப்பு

    ஏற்கெனவே 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும், மொகர் சிங், காளியா, மகேஷ், பில்த்தியா, ருசி ஆகிய ஐந்து பேரும், வேறு வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    எப்படி ஓட்டை போட்டீர்கள்?

    எப்படி ஓட்டை போட்டீர்கள்?

    ரயிலில் பணம் கொண்டுவரப்படும் தகவலை கொள்ளை கும்பலுக்கு தெரிவித்தது ரயில்வே ஊழியர்களா? அல்லது வேறு ஏதேனும் அதிகாரிகளா? ரயில் பெட்டி எந்த இடத்தில் வெட்டி ஓட்டை போட்டீர்கள்? இவ்வளவு பணம் இந்த ரயிலில்தான் வருகிறது என்று உங்களுக்கு யார் தகவல் சொன்னது? ரயிலில் எந்த ஆயுதத்தை வைத்து அவ்வளவு பெரிய ஓட்டையை போட்டீர்கள்? என்று கேள்விமேல் கேள்வி போலீசார் கேட்கிறார்களாம்.

    4 நாள் ஆகிவிட்டது

    4 நாள் ஆகிவிட்டது

    ஆனால் விசாரணை ஆரம்பித்து 4 நாள் ஆகியும் ஒருத்தரும் வாய் திறக்கவில்லையாம். பதிலளிக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்களாம் கொள்ளையர்கள். இப்படியே அமைதியாக இருப்பதால் நாள்தான் வீணாகிறதாம். கொள்ளையர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் விசாரணையும் தாமதமாகி கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் எந்த பதிலும கொள்ளையர்கள் தெரிவிக்காத நிலையில், தற்போது 4 நாள் முடிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

    நவம்பர் 12-ம் தேதி ஆஜர்

    நவம்பர் 12-ம் தேதி ஆஜர்

    மீதமிருக்கும் நாட்களில் எப்படியும் உண்மையையும், இந்த கொள்ளைக்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்களையும் பிடித்துவிடுவோம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 14 நாட்கள் போலீஸ் விசாரணைக்குப் பின் வரும் நவம்பர் 12 அன்று இவர்கள் அனைவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    CBCID Police interrogated 7 people about Salem Train robbery in Chennai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X