சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேலம் உருக்காலையை தனியாருக்கு விட மாட்டோம்.. அரசின் முயற்சியை முறியடிப்போம்.. தொழிலாளர்கள் உறுதி

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரும்பாலையின் பங்குகளை தனியாருக்கு விற்க வெளியிடப்பட்ட சர்வதேச அளவிலான டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து. ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் உருக்காலை கடந்த 1981-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இந்த உருக்காலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு சாதனைகள் படைத்துள்ள சேலம் உருக்காலை பொதுத் துறை நிறுவனம் என்று நாம் கூற முடியாது.

Cetral government Lying to be running at a loss. Salem Steel workers are angry

தமிழகத்தில் விலைமதிக்க முடியாத சொத்து என்றே கூறலாம். ஏனெனில் அந்த அளவிற்கு சேலம் உருக்காலை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் சிறப்பான இடத்தை பெற்ற சேலம் உருக்காலையின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், ஏராளமான வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

மும்பை வெள்ளக்காடானபோது எங்கிருந்தீர்கள்.. தெருவில் நின்றிருக்க வேண்டாமா?.. காங்.க்கு ராகுல் கேள்விமும்பை வெள்ளக்காடானபோது எங்கிருந்தீர்கள்.. தெருவில் நின்றிருக்க வேண்டாமா?.. காங்.க்கு ராகுல் கேள்வி

தவிர நம் நாட்டிலுள்ள ரயில்வே துறை, அணுமின் நிலையம், விண்வெளி ஆராய்ச்சி மையம், நாணயங்கள் உற்பத்தி போன்ற பல தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்களில் சேலம் உருக்காலையின் பங்கு மிக அதிகம்.

இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களிலேயே மிக சிறப்பாக செயல்பட்டு வரும் சேலம் உருக்காலையை, 2,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக கூறிய மத்திய அரசு, அதனை தனியார் மயமாக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுளுக்கு மேலாக சேலம் உருக்காலை பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் தான் சேலம் இரும்பாலை உட்பட 3 உருக்கு ஆலைகளை தனியாருக்கு விற்கும் டெண்டரை மத்திய பொதுத்துறை நிறுவனமான செயில் நேற்று வெளியிட்டது. இதனால் சேலம் உருக்காலையில் பணிபுரியும் 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து செயில் நிறுவனத்தின் முடிவை கண்டித்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . இது பற்றி பேசிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மத்திய அரசு பொறுப்பேற்றவுடன் 100 நாள் செயல்திட்டம் என்ற அடிப்படையில் சேலம் உருக்காலையை உட்பட 3 உருக்காலைகளை தனியார் மயப்படுத்த சர்வதேச டெண்டரை மத்திய அரசு விட்டுள்ளது.

காரணம் கேட்டால் சேலம் உருக்காலை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் நிச்சயம் எங்களுக்கு தெரியும் சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்கவில்லை. எனவே மத்திய அரசு பொய்யானஒரு காரணத்தை சொல்லி, சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க முயலுகிறது என சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே மத்திய அரசின் முயற்சியை முறியடித்து தனியாருக்கு தாரை வார்க்காமல் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாகவே சேலம் உருக்காலையை செயல்பட வைப்போம் என உறுதிபட கூறியுள்ளனர்.

English summary
All Salem steel plant workers are on strike today. Protest against an international tender issued to sell iron stocks to private companies. They are involved in a one-day strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X