சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் பழனிசாமியின் புகைப்படக்காரருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி

Google Oneindia Tamil News

சேலம் : மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்காக படம் எடுக்க சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படக்காரருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் பொதுவாக காய்ச்சல் உள்ளிட்ட எதேனும் அறிகுறிகள் இருந்தாலும் எல்லா மாவட்டத்தினருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.. முதல்வருக்கு விவசாயிகள் நன்றிமேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.. முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

Chief Minister Palanisamys photographer Mohan have covid -19 positive

இந்நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலோ அல்லது பிற மாநிலம் மற்றும் நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படுவதுடன் 15 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்காக படம் எடுக்க சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படக்காரருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் மோகனுக்கு உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் புகைப்பட காரராக பணியாற்றி வருகிறார்.

மேட்டூர் திறப்பு உள்ளிட்ட முதல்வர் நிகழ்ச்சியை படம் எடுப்பதற்காக சேலம் சென்ற இடத்தில்தான் கொரோனா தொற்று உறுதி உறுதியாகி உள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுக்கு கொரோனா பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

English summary
Chief Minister Palanisamy photographer Mohan tested positive for covid -19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X