நீங்கள்தான் பெரிய தலைவராச்சே.. இடைத்தேர்தலில் நிற்க வேண்டியதுதானே?.. கமலுக்கு முதல்வர் சரமாரி
சேலம்: நீங்கள்தான் பெரிய தலைவராச்சே, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியதுதானே என கமல்ஹாசனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சித் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே கமல்ஹாசன், ஆட்சியாளர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் கட்சி தொடங்கியதும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார். அதில் அவருக்கு 4-ஆவது இடத்தை மக்கள் அளித்தார்கள்.
மொத்தமாக 4 சதவீதம் வாக்குகளை அவரது கட்சி பெற்றிருந்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.
தயவுசெய்து அதை பாமகவுக்கு தந்துடாதீங்க.. நெருக்கும் அதிமுக சீனியர்கள்.. மேயர் தேர்தல் கெடுபிடி!

வயதானவர்கள்
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்த சேலம் ஓமலூருக்கு முதல்வர் எடப்பாடி சென்றார். அங்கு செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வயதானதால்தான் நடிகர்கள் கட்சி தொடங்குகிறார்கள்.

கமலுக்கு என்ன தெரியும்
கமல்ஹாசன் தான் பெரிய தலைவராச்சே. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியதுதானே. அரசியல் பற்றி கமலுக்கு என்ன தெரியும்?

திரைப்படங்கள்
எத்தனை ஊராட்சிகள், எத்தனை பேரூராட்சிகள், எத்தனை நகராட்சிகள், எத்தனை மாநகராட்சிகள் உள்ளன என்பது குறித்து கமல்ஹாசனுக்கு தெரியுமா? கடைசி வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

நடிகர் சிவாஜி
மக்கள் வரிப்பணத்தில் திரைப்படங்களில் நடித்த கமல், நன்கு சம்பாதித்தார். இதுவரை மக்களுக்கு என்ன செய்தார்? மக்கள் மத்தியில் தங்களை பெரிய தலைவர்கள் போல் காட்டி கொள்கிறார்கள். இவர்களை விட பெரிய நடிகர் சிவாஜி கணேசன்.

விமர்சனம்
அவர் அரசியலுக்கு வந்த பிறகு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலைதான் இந்த நடிகர்களுக்கும் வரும். தங்களது தொண்டர்களாவது தனது படத்தை பார்க்கட்டும் என்பதற்காகத்தான் சினிமாவில் நடிக்கும் கமல் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் என முதல்வர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!