சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன பலன்?.. அவரால் பூமிக்குத்தான் பாரம்!.. முதல்வர் கடும் விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    EPS slam P. Chidambaram | ப. சிதம்பரத்துக்கு அவரது சுயநலன்தான் முக்கியம்: முதல்வர் விமர்சனம்-வீடியோ

    மேட்டூர்: முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது, அவரால் பூமிக்குத்தான் பாரம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார்.

    ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது அந்த 370 சட்டப்பிரிவு நீக்க மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது.

    இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், எந்த மசோதாவையும் முழுமையாக படித்து பார்க்காமல் ஆதரவு அளிக்கிறது அதிமுக அரசு.

    மக்களின் நிலை

    மக்களின் நிலை

    தமிழகத்தை யூனியன் பிரதேசமாக மாற்றினால் கூட அதிமுக அரசு மவுனமாக இருக்கும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து சேர, சோழ, பாண்டிய நாடு என பிரித்தால் மக்களின் நிலை என்ன என கேள்வி எழுப்பியிருந்தார்.

    புண்ணியம்

    புண்ணியம்

    இந்த நிலையில் இன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக நீர் திறக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஏழுமலையான் புண்ணியத்தால் மேட்டூர் அணை நிரம்பியது.

    முழு கொள்ளளவு

    முழு கொள்ளளவு

    காவிரி நீர் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக மனமுருகி நான் பிரார்த்தனை செய்ததால் கர்நாடகத்தில் கனமழை பெய்து தற்போது மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்துள்ளது. தொடர் நீர் வரத்தால் மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்.

    பூமிக்குத்தான் பாரம்

    பூமிக்குத்தான் பாரம்

    நீர் வரத்தை பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும். ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் என்ன கிடைத்தது. அவரால் பூமிக்குத்தான் பாரம்.

    கடும் விமர்சனம்

    கடும் விமர்சனம்

    காவிரி, முல்லை பெரியாறு பிரச்சினையை தீர்த்தாரா. மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்துக்கு நிதி ஒதுக்கினாரா? அவருக்கு அவரது சுயநலன்தான் முக்கியம் என்று ப.சிதம்பரத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    English summary
    CM Edappadi Palanisamy says that P.Chidambaram didnt do anything for Tamilnadu while he was Central Minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X