சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாரியப்பன் மண்டியில் பயங்கர தீ.. அத்தனை தேங்காய்களும் கருகின.. 2 மணி நேரம் போராடி அணைப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தேங்காய் குடோனில் திடீர் தீ விபத்து.. தேங்காய்கள் எரிந்து நாசம்-வீடியோ

    சேலம்: மாரியப்பனின் தேங்காய் மண்டியில் எப்படி திடீரென தீ பிடித்தது என்று சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள பகுதி மாசிநாய்க்கன்பட்டி. இங்கு வசித்து வருபவர்தான் மாரியப்பன். இவர் சொந்தமாக தேங்காய் குடோன் வைத்துள்ளார்.

    Coconut godown fire accident near Salem

    சேலம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தேங்காய்களை வாங்கி வந்து குடோனில் வைத்திருந்து, அதன் பின்னர் கேரள மாநிலத்திற்கு மொத்தமாக விற்பனை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று விடிகாலை மாரியப்பனின் தேங்காய் மண்டியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. தீ மளமளவென பிடித்து தேங்காய்கள் வெடித்து எரிய ஆரம்பித்தன. இந்த தீ விபத்து குறித்து அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் உடனே சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    7 அடி நீளம்.. அது பாட்டுக்கு ஜாலியாக நகர்ந்து போனது.. அலறியடித்து ஓடிய பள்ளிப்பட்டு மக்கள் 7 அடி நீளம்.. அது பாட்டுக்கு ஜாலியாக நகர்ந்து போனது.. அலறியடித்து ஓடிய பள்ளிப்பட்டு மக்கள்

    உடனடியாக 2 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நல்லவேளை.. தேங்காய் மண்டி பக்கத்திலேயே ஒரு ஸ்கூல் உள்ளது. நிறைய வீடுகளும் இருக்கின்றன.

    ஆனால் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததனால், மளமளவென எரிந்த தீ அருகில் பள்ளி, வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இருந்தாலும் மாரியப்பன் வைத்திருந்த எல்லா தேங்காய்களும் எரிந்து கருகி சாம்பலாயின. தேங்காய் மண்டியில் தீ எப்படி பிடித்தது என அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    English summary
    Fire Accident in Coconut godown in Ayothiya Pattinam near Salem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X