சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிரண்டு போய் அரண்டு போய் உள்ளார் மு.க. ஸ்டாலின்… முதல்வர் காரசார பேச்சு

Google Oneindia Tamil News

ஓமலூர்: அதிமுக கூட்டணியை பார்த்து மு.க. ஸ்டாலின் மிரண்டுபோய், அரண்டு போய் உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இதில், பாமக தலைவர் ஜி.கே. மணி மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

எம்எல்ஏவே இல்லாத கட்சி.. தம்பிதுரை தாக்கு.. பிரேமலதாவிற்கு அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் பதிலடி எம்எல்ஏவே இல்லாத கட்சி.. தம்பிதுரை தாக்கு.. பிரேமலதாவிற்கு அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் பதிலடி

கூட்டணியை உடைக்க சதி

கூட்டணியை உடைக்க சதி

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணியை உடைக்க எதிர்கட்சிகள் சதி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். அதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

தொண்டர்கள் கவனம்

தொண்டர்கள் கவனம்

பாலில் ஒரு துளி விஷம் பட்டால்கூட பால் கெட்டு விடும். அதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் கவனமாக இருந்து முழு ஒத்துழைப்பு நல்கி, தேர்தலை சந்திக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

நல்ல கூட்டணி

நல்ல கூட்டணி

என்னென்ன வார்த்தைகள் பேசக் கூடாதோ அத்தனை வார்த்தைகளையும் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நல்ல கூட்டணியை அமைத்து உள்ளோம். இந்த சந்தர்ப்பம் என்றைக்கும் கிடைக்காத சந்தர்ப்பம். ஏனென்றால், எதிர்பார்த்தபடி பல பேர் மத்தியில் நம் அணியைச் சேர்ந்தவர்கள் பொறுப்புக்கு வருவார்கள் பிரகாசமான வாய்ப்புள்ளது.

ஒரே கல்லில் 2 மாங்காய்

ஒரே கல்லில் 2 மாங்காய்

கட்சியும் மலரும் ; தமிழ் நாடும் வளரும். எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது . இன்னும் சில காட்சிகள் புதிதாக கூட்டணி சேர விரும்புகிறார்கள். இந்த கூட்டணி அடுத்த தேர்தலிலும் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

English summary
Edappadi Palanisamy said that Conspiracy is going to break the AIADMK alliance Edappadi Palanisamy said that Conspiracy is going to break the AIADMK alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X