சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன கொடுமை சார்.. தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆன புது மாப்பிள்ளை.. சேலத்தில்!!

தாலி கட்டியதும் தனிமைப்படுத்தப்பட்டார் கல்யாண பெண்

Google Oneindia Tamil News

சேலம்: தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் மணப்பெண்ணை தனிமைப்படுத்திவிட்டனர்.. இதனால் மணமகன் சோகமாகிவிட்டார்.. கொரோனா தொற்று இருந்த நிலையிலும், பெண்ணுக்கு திருமணம் நடந்ததும், இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் சேலத்தில் பரபரப்பை தந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த மணப்பெண்.. 26 வயதாகிறது.. சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

 coroanvirus: bride corona infection quarantine near salem

இவருக்கும் திருப்பூரை சேர்ந்த இளைஞருக்கும் 5 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் மே 24-ம் தேதி, அதாவது நேற்றைய தினம் இவர்களுக்கு கல்யாண தேதி குறிக்கப்பட்டது. இதற்காக கடந்த, 21-ல் இ-பாஸ் பெற்று சென்னையிலிருந்து மணப்பெண் கிளம்பி வந்தார்.

ஊரடங்கு என்பதால், குறைவான ஆட்களை வைத்தே திருமணத்தை நடத்தி முடித்து விடலாம் என்று முடிவானது.. அதற்காக இரு வீட்டு தரப்பினரும் கெங்கவல்லிக்கு வந்தனர்... இந்த நேரத்தில் சேலம் முழுவதும் தீவிரமான கொரோனா தடுப்பு நடவடிக்கையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம், ஊர் விட்டு ஊர் என யார் வந்தாலும் அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.. அந்த வகையில்,2 வீட்டினரும் சேலம் வந்தபோது அவர்களுக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 2 மாவட்டங்களை கடந்தபோது நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லை என ரிசல்ட் வந்தது.. ஆனால் தலைவாசல், நத்தக்கரை சோதனைச்சாவடியில் மணப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இந்த விஷயம் சேலம் கலெக்டருக்கு எட்டியது.. அவரிடம் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்து முடிக்க பெண் வீட்டில் அனுமதி கேட்கப்பட்டது.. இதையடுத்து கலெக்டரின் அனுமதியுடன், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன், மிக மிக சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. இந்த கல்யாணத்தில் பெண் - மாப்பிள்ளை என மொத்தமே 12 பேர்தான் கலந்து கொண்டனர்.

மக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி!மக்கள் தொகையைக் குறைக்க கொரோனாவை கண்டுக்காமல் இருக்கிறதா ஹூ.. உலா வரும் பொய்ச் செய்தி!

ஆனால், தாலிகட்டிய கொஞ்ச நேரத்திலேயே கல்யாண பெண்ணை தனிமைப்படுத்தினர்.. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தினர்.. அதேபோல, மாப்பிள்ளை அவரது குடும்பத்தினரையும் வீட்டில் தனிமைப்படுத்தினர்... அந்தந்த வீடுகளில் நோட்டீஸையும் ஒட்டினர்.. கல்யாணம் நடந்த வீடு, அந்த தெரு, அந்த பகுதி மொத்தமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, நோய் தடுப்பு பணியும் மும்முரமானது.

தாலி கட்டிய உடனேயே கல்யாண பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.. மாப்பிள்ளை இன்னும் 28 நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்!!

English summary
coroanvirus: bride corona infection quarantine near salem
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X