சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - பள்ளி உடனடியாக மூடல்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மாணவரும் அந்த வகுப்பில் இருந்த 36 மாணவர்களும் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதி பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அந்த வகுப்பில் இருந்த 36 மாணவர்களும் கண்காணிப்பில் உள்ளனர். பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

Recommended Video

    #BREAKING சேலம்: பள்ளி சென்ற 10ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா!

    தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் 18 லட்சம் மாணவர்கள் 10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

    Corona possitive for 10th class student in Salem district

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் பள்ளிகள் மூடப்பட்டன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து ஜனவரி 19ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுத உள்ள10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

    வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து சாப்பிடக்கூடாது, விளையாட்டு பிரிவு கிடையாது, மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பழக வேண்டும். கட்டாயம் மாஸ்க், கிளவுஸ் அணிந்து வரவேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இந்தநிலையில் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதி பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அந்த வகுப்பில் இருந்த 36 மாணவர்களும் கண்காணிப்பில் உள்ளனர். மாணவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பள்ளி மூடப்பட்டுள்ளது.

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள சேலம் மாவட்ட ஆட்சியர், அந்த மாணவர் ஊரில் இருந்த போது காய்ச்சல் ஏற்பட்டது. சளி தொந்தரவு இருந்தது என்றும் கொரோனா பரிசோதனைக்கு கொடுத்து விட்டு பள்ளிக்கு வந்து விட்டார். இந்த நிலையில் தற்போது மாணவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து அந்த மாணவருடன் விடுதியில் தங்கி இருந்த 36 மாணவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். பள்ளிக்கு வந்த பின்னர் மாணவருக்கு கொரோனா தொற்று

    பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரிய கிருஷ்ணாபுரம் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. திங்கட்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Corona has been confirmed for a 10th class student who went to school in Thumpam panchayat in Salem district. All 36 students in that class are under surveillance. The school has been closed following the confirmation of Corona to the student.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X