சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டெல்லி போனீங்களா.. உங்க ஆளுங்களாலதான் கொரோனா பரவுது" சிகிச்சை தர மறுத்த டாக்டர்.. கர்ப்பிணி கண்ணீர்

முஸ்லிம் கர்ப்பிணிக்கு சிகிச்சை தர மறுத்துள்ளார் பெண் டாக்டர் ஒருவர்

Google Oneindia Tamil News

சேலம்: "நீங்க யாராவது டெல்லி மாநாட்டிற்கு போய் வந்தீங்களா, உங்களாலதான் கொரோனா பரவுதுன்னு சொல்லி எனக்கு சிகிச்சை தர டாக்டர் லதா மறுத்துவிட்டார்" என்று இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.. மேலும் தனக்கு சிகிச்சை அளிக்க மறுத்த பெண் டாக்டர் குறித்து சேலம் கலெக்டர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

Recommended Video

    'டெல்லி போனீங்களா.. உங்க ஆளுங்களாலதான் கொரோனா பரவுது' சிகிச்சை தர மறுத்த டாக்டர்.. கர்ப்பிணி கண்ணீர்

    சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு பகுதியில் வசித்து வரும் தம்பதி ஜாவித் - சல்மா.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி 2 வருமாகிறது.. இப்போது சல்மா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இவரது வீட்டின் அருகே இயங்கி வரும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 7 மாதமாக செக்-அப்புக்கு சென்று வந்துள்ளார்.. லதா என்ற டாக்டர்தான் இவரை பரிசோதித்து வந்துள்ளார்.

    சிகிச்சை

    சிகிச்சை

    இந்நிலையில், 8வது மாத செக்அப்புக்கு சென்றபோது, முஸ்லிம் என்ற கோணத்தில் சல்மாவை , டாக்டர் லதா அணுகியதாகவும், அதனால் சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சல்மா, சேலம் கலெக்டர் ஆபீசில் புகார் அளித்தார்.. இதையடுத்து, அன்னதானப்பட்டி ஸ்டேஷனிலும் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    செக்-அப்

    செக்-அப்

    பின்னர் செய்தியாளர்களிடம் சல்மா பேசும்போது, கடந்த 7 மாதமாக தனியார் ஆஸ்பத்திரியில் லதா என்ற பெண் டாக்டரிடம் செக்அப் போய்ட்டு வந்தேன்.. ஆனால் இன்னைக்கு போகும்போது, "நீங்களோ, உங்க சொந்தக்காரங்களோ யாராவது டெல்லி மாநாட்டிற்கு போய் வந்தீங்களா என்று கேட்டார். அதற்கு நான் இல்லைன்னு சொன்னேன்.

    மதம்

    மதம்

    அப்போதும், உங்க ஆளுங்களாலதான் கொரோனா பரவுது.. மே 3-ம் தேதிக்கு அப்பறம் வரணும் என்று சொல்லி எந்த செக்அப்பையும் எனக்கு செய்யாமல் திருப்பி அனுப்பிட்டாங்க. என் ஹெல்த் பத்தி எதுவுமே கேட்காம, மதத்தை பத்தியே கேள்வி கேட்டாங்க.. கஷ்டமா இருந்தது.. டாக்டர் என்றால் அவங்க பணியைதானே செய்யணும்.. முஸ்லிம் என்பதற்காகவே என்னை 3-ம் தேதிக்கு அப்பறம் வாங்கன்னு சொல்றாங்க.

    கண்ணீர்

    கண்ணீர்

    ஒரு ஸ்கேன் கூட பண்ணல.. வெயிட்கூட செக் பண்ணல.. போன மாசம் கூட ரத்தம் டெஸ்ட் பண்ணல, இந்த மாசம் எனக்கு டெஸ்ட் பண்ணனும்னு சொன்னேன்.. அதையும் காதில் வாங்கிக்கல.. இதெல்லாம் முடியட்டும்ன்னு சொல்லிட்டாங்க.. நான் வீட்டுக்கு அழுதுட்டேதான் வந்தேன்" என்று கண்ணீருடன் தெரிவித்தார். இந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை தந்து வருகிறது.

    English summary
    coronavirus: denied medical check up for muslim pregnant lady in salem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X