சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிறைய டைரக்டர்கள் வர்றாங்க.. கேட்கறாங்க.. பயோபிக் படத்துக்கு 'நோ' சொன்ன நடராஜன்!

Google Oneindia Tamil News

சேலம்: 'எனது வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் வீடு தேடி வந்தனர். ஆனால், இப்போது எனக்கு ஆர்வம் இல்லை' என்று இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நடராஜன்.. இந்தியாவின் சொத்தாக மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் வீரர். விராட் கோலியின் era-வில் இந்திய அணியல் திறமையான, திடமான, ஸ்டிராடஜிகளுக்கு ஏற்ப சுயமாக சிந்தித்து பவுல் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டு வரவேற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

cricketer Natarajan interview about his biopic movie

அந்த வரிசையில் அணியில் இணைந்திருக்கும் ஆர்.நடராஜன், கோலி தொடங்கி கோச் சாஸ்திரி வரை அனைவர் மத்தியிலும் 'He is a Valuable Bowler' என்ற பெயருக்கான விதையை நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விதைத்துவிட்டார்.

இந்தியா திரும்பிய பிறகு பழனியில் மொட்டை, வேண்டுதல் நிறைவேற்றம் என்று பிசியாக இருக்கும் நடராஜன், நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ஓய்வுக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் பயிற்சியை தொடங்கிவிட்டதாகவும், உடல் வலிமையை அதிகரிக்க பிசிசிஐ அளித்துள்ள ஆலோசனைக்கு ஏற்ப அடுத்த மூன்று வாரத்திற்கு பயிற்சி மேற்கொள்ளப் போவதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், ஆஸ்திரேலிய தொடர் முடிந்து வீட்டுக்கு திரும்பி இவ்வளவு நாட்கள் கழித்தும் ரசிகர்கள் பலர் என்னைப் பார்க்க வீட்டுக்கு வருகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருந்தாலும், வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இப்போதெல்லாம் வெளியில் கூட போக முடியவில்லை. முன்பு போல் இயல்பாக வெளியில் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எப்பொழுதும் சாதாரண மனிதனாக இருக்கவே விரும்புகிறேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

குறிப்பாக, எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் சிலர் வீடு தேடி வந்தார்கள் என்றும், ஆனால் அதில் தனக்கு ஆர்வமில்லை; கிரிக்கெட்டில் மட்டும் முழு கவனம் செலுத்த விரும்புவதாகவும் நடராஜன் கூறியிருக்கிறார்.

பெங்களூரு டூ ஜெ. நினைவிடம்..அதிமுக தலைமை அலுவலகம்.. மாஸ் காட்ட தயாராகும் சசிகலா அண்ட் கோ பெங்களூரு டூ ஜெ. நினைவிடம்..அதிமுக தலைமை அலுவலகம்.. மாஸ் காட்ட தயாராகும் சசிகலா அண்ட் கோ

இறுதியாக, 2015ல் எனது பந்துவீச்சு சந்தேகத்துக்குள்ளாகி தடை விதிக்கப்பட்ட போது வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்து, மனதளவில் பாதிக்கப்பட்டேன். ஆனால், அதன் பிறகு நண்பர்கள், பயிற்சியாளர்கள் உதவியுடன் மீண்டு வந்தேன். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றும் உருக்கமாக பேசினார்.

English summary
cricketer Natarajan interview about biopic movie - Reports
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X