• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அப்பட்டமாக காட்டிய "கேமிரா".. சுருண்ட 2 பேர்.. யார் அந்த "புண்ணியவான்".. யார் மகனோ.. குவிகிறது சபாஷ்

Google Oneindia Tamil News

சேலம்: ஒரு இளைஞரை பொதுமக்களும் போலீசும் தேடி கொண்டிருக்கிறார்கள்.. எதற்காக? மனம் திறந்து பாராட்டுவதற்காகத்தான்.. ஆனால் அவர் யார் என்று தான் தெரியவில்லை..!

  Salem to Coimbatore Highways-ல் Car மோதி தூக்கிவீசபட்ட Bike | Oneindia Tamil

  சேலம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 2 நாளைக்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டது.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அஜித் மற்றும் அருண் ஆகியோர் பழனிக்கு போய்விட்டு, பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

  எங்ககிட்ட 4 எம்எல்ஏ இருக்காங்க.. மாஸ்க் அணியாட்டி என் வண்டியை நிறுத்துவீங்களா.. விசிக வழக்கறிஞர் எங்ககிட்ட 4 எம்எல்ஏ இருக்காங்க.. மாஸ்க் அணியாட்டி என் வண்டியை நிறுத்துவீங்களா.. விசிக வழக்கறிஞர்

  அப்போது திடீரென ஒரு ஹூண்டாய் கார் வேகமாக வந்து, பைக்குக்கும், இன்னொரு வாகனத்துக்கும் நடுவில் நுழைந்து சென்றது..

  விபத்து

  விபத்து

  வந்த வேகத்தில் அந்த கார், பைக்கின் பக்கவாட்டில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. பைக்கில் இருந்த அருண், அஜித் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.. இதை பார்த்த பொதுமக்கள், தங்களின் வாகனத்தை நிறுத்தி போலீசுக்கு தகவல் சொன்னார்கள். இப்படி விபத்தை ஏற்படுத்திய அந்த கார், நிற்கவே இல்லை.. பைக்கை மோதிவிட்டு, அதே ஸ்பீடுடன் பறந்துவிட்டது.

   விசாரணை

  விசாரணை

  உயிருக்கு போராடிய 2 பேரையும் போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதற்கு பிறகு விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால் அதற்குள் இந்த விபத்தின் வீடியோவானது, சோஷியல் மீடியாவிலும் வெளியாகி வைரலானது.. அந்த வீடியோவின் அடிப்படையில் காரை ஓட்டி வந்தவர் சதீஷ்குமார் என்பதும், அவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது..

  கன்ட்ரோல்

  கன்ட்ரோல்

  இதையடுத்து சதீஷ்குமாரிடம் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த காரில் வினோத்குமார் என்பவரும் பயணித்துள்ளார்.. 120 கிமீ முதல் 140 கிமீ வரை காரை ஓட்டியுள்ளார் சதீஷ்.. அப்போது அவர் தண்ணி அடித்திருந்தாராம்.. அதனால் வண்டியை உடனே கன்ட்ரோல் செய்ய முடியவில்லை என்று போலீசில் வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துவிட்டனர்.

  சதீஷ்குமார்

  சதீஷ்குமார்

  இப்போது விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு சம்பந்தமாக புது தகவல் வெளியாகி உள்ளது. சதீஷ்குமார் காருக்கு பின்னாடியே இன்னொரு காரும் வந்துள்ளது.. பெங்களூரில் இருந்து ஒரு இளைஞர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.. அந்த காரில் "டேஷ் கேமரா" பொருத்தப்பட்டுள்ளது.. நடந்த விபத்து அப்படியே, இந்த பெங்களூர் கார் கேமராவில் பதிவாகி விட்டது. விபத்தில் அடிபட்டு கிடந்த 2 பேரை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள் திரண்டு வந்தனர்..

  வீடியோ

  வீடியோ

  அப்போது, அந்த பெங்களூர் இளைஞர், அந்த பகுதியில் உள்ளவர்களின் வாட்ஸ்அப் நம்பர்களுக்கு இந்த காட்சிகளை அனுப்பி வைத்து, உடனே போலீசுக்கு இதை அனுப்புங்கள் என்று சொல்லி உள்ளார்.. அதுமட்டுமல்ல, படுகாயமடைந்த 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பும்வரை அந்த பெங்களூரு இளைஞர் அங்கேதான் பதைபதைப்பில் இருந்தாராம்... இவர் யார் என்று தெரியவில்லை.. இந்த இளைஞர் இல்லாவிட்டால், குற்றவாளிகளை கைது செய்திருக்க முடியாது..

  மனிதம்

  மனிதம்

  வெளிமாநிலம் என்றாலும், அந்த பகுதி மக்களின் வாட்ஸ்அப் நம்பர்களுக்கு வீடியோ அனுப்பி வைத்து உதவியுள்ளார்..நேரடியாக விபத்தை ஏற்படுத்தியவர் தப்பி ஓடிய நிலையில், எங்கிருந்தோ வந்து, இப்படி மலை போல உதவியை செய்த அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. தன்னுடைய பெயர், முகவரி எதுவுமே சொல்லாமல் உதவியை மட்டும் செய்துவிட்டு கிளம்பி உள்ளார்.. யார் அவர்? யார் பெற்ற மகனோ? தெரியவில்லை.. ஆனால், யார் ரூபத்திலாவது மனிதம் இந்த மண்ணில் மீண்டும் மீண்டும் தழைத்து கொண்டே இருக்கிறது...!

  English summary
  Dash Camera: Salem Car accident and two hosptialised
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X