• search
சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

யார் அந்த 3 பேர்.. சூட்கேஸில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் கொலையில் "க்ளூ".. 5 தனிப்படை தீவிரம்

Google Oneindia Tamil News

சேலம்: நிர்வாண கோலத்தில், கை, கால்கள் கட்டப்பட்டு பெண் ஒருவர் சூட்கேஸில் சடலமாக மீட்ட சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை கிளப்பி வந்த நிலையில், கொலையாளியை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 3 பேர் மீது போலீசாரின் சந்தேகம் திரும்பி உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவர்களை தேடும் பணியும் துரிதமாகி உள்ளது.

  சூட்கேசில் பெண் சடலம்… அதிர வைத்த பயங்கரம்… விசாரணையில் இறங்கிய போலீசார்

  சேலத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த பெங்களூருவை சேர்ந்த பெண்ணை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து மறைத்து வைத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சேலம் குமாரசாமிப்பட்டியில் சண்முகா அபார்ட்மென்ட் உள்ளது.. இது நடேசன் என்ற அதிமுக பிரமுகருக்கு சொந்தமான அப்பார்ட்மென்ட்.

  திமுக எம்பி கொடுத்த குரல்.. ஒன்றரை வருடத்திற்கு பின் சேர்ந்த காதல் ஜோடி.. தடுக்கப்பட்ட ஆணவ கொலை! திமுக எம்பி கொடுத்த குரல்.. ஒன்றரை வருடத்திற்கு பின் சேர்ந்த காதல் ஜோடி.. தடுக்கப்பட்ட ஆணவ கொலை!

  பதற்றம்

  பதற்றம்

  இந்நிலையில், ஹவுஸ் ஓனருக்கு பிரதாப் போன் செய்துள்ளார்.. அதில், தான் சென்னையில் வேலை விஷயமாக இருப்பதாகவும், மனைவி தேஜ் மண்டலுக்கு போன் செய்தால், அவர் எடுக்கவே இல்லை, என்ன ஆச்சு என்று தெரியவில்லை என்று பதற்றத்துடன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, ஹவுஸ் ஓனர் நடேசனும், தேஜ்மண்டல் வீட்டுக்கு சென்றார்.. ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.. மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

   போலீஸ் விசாரணை

  போலீஸ் விசாரணை

  இதுகுறித்து உடனடியாக நடேசன், சேலம் மாநகர போலீசுக்கு தகவல் அளித்தார்.. அதன்பேரில் போலீசாரும் விரைந்து வந்து, வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. அப்போது, வீட்டின் பரண் மீது ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் இருந்துள்ளது... அந்த சூட்கேஸில் இருந்துதான் அதிக நாற்றம் வந்தது. இதையடுத்து, உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை பதிவு செய்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்தபோது கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் இருந்தது.

   பாலியல் தொழில்

  பாலியல் தொழில்

  அந்த பெண் தேஜ் மண்டல் என்பது உறுதியானது.. தேஜ்மண்டல் இந்த வீட்டிற்கு குடிவருவதற்கு முன்பு, குமாரசாமிப்பட்டி பகுதியில் குடியிருந்துள்ளார்.. அப்போதிருந்தே பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.. பாலியல் தொழிலில் ஏற்கனவே கைதான நபர்களிடமும் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.. ஆனால், மற்றொரு பக்கம் மசாஜ் சென்டர்களையும் நடத்தி வந்துள்ளார்.. சேலம் மாநகரில் தேஜ் அழகு நிலையம் என்ற பெயரில் பேர்லண்ஸ், சங்கர் நகர் உள்ளிட்ட 3 இடங்களில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்திருக்கிறார்.

   தீவிர விசாரணை

  தீவிர விசாரணை

  தேஜ்மண்டலை கொன்றவர்கள் யார் என்று தெரியவில்லை.. எதற்காக இந்த கொலை நடந்தது? முன்விரோதம் காரணமா? தொழில்போட்டியா? என்ற ரீதியில் விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர்.. ஏற்கனவே பாலியல் தொழிலில் கைதானவர்களின் லிஸ்ட்டை வைத்தும் விசாரணையை விரிவுபடுத்தி உள்ளனர்.. தற்போது வெளியான முதற்கட்ட விசாரணையின்படி, தேஜ்மண்டல் உயிரிழந்து குறைந்தது 5 நாட்களாகவது ஆகியிருக்கலாம் என்கிறார்கள்..

  பரபரப்பு

  பரபரப்பு

  அதுமட்டுமல்ல, கடந்த மாதத்தில் பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன்களில் தேஜ் மண்டல் மீது விபச்சாரம் நடத்தியதாக கேஸ் பதிவாகி உள்ளதும் விசாரணையில் வெளிவந்துள்ளது.. அப்பார்ட்மென்ட் வீட்டிற்குள் கை, கால்கள் கட்டப்பட்டு, சூட்கேஸில் அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் சடலம் பெரும் பரபரப்பை சேலத்தில் ஏற்படுத்தி வருகிறது.

   நிதி நிறுவனம்

  நிதி நிறுவனம்

  இந்த கொலை தொடர்பான விசாரணைக்கு 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது... இவர்கள் தங்கள் அதிரடியை துவக்கி உள்ளனர்..முதலாவதாக, சென்னையில் இருந்து ஹவுஸ் ஓனருக்கு போன் செய்த கணவர் பிரதாப் பற்றி விசாரித்துள்ளனர்.. அப்போதுதான் தெரிந்தது அவர் தேஜ்மண்டலின் கணவர் இல்லையாம்.. ரகசிய காதலனாம்.. உடனடியாக அவரை சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார்.. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

  சென்னை

  சென்னை

  அப்போது போலீசில் அவர் சொல்லும்போது, "சில மாதங்களுக்கு முன்புதான் தேஜ்மண்டல் எனக்கு பழக்கமானார்.. ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்தோம்.. ஒரு மாதத்திற்கு முன்பு வேலை விஷயமாக சென்னைக்கு போய்விட்டேன்.. ஆனால், தினமும் போனில் பேசுவோம்.. இந்த 5 நாட்களாக அவர் என்னிடம் பேசவில்லை.. அதனால்தான் சந்தேகம் வந்து ஹவுஸ் ஓனருக்கு போன் செய்தேன்" என்றார். இந்த வாக்குமூலம் உண்மைதானா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

   3 பேர் தலைமறைவு

  3 பேர் தலைமறைவு

  இதனிடையே, தேஜ்மண்டல் வீட்டருகே குடியிருந்த 2 இளம்பெண் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.. அவர்கள் 3 பேருமே பெங்களூரை சேர்ந்தவர்கள்... ஆனால், 5 நாட்களாக அவர்களும் சேலத்தில் இல்லை.. எங்கோ தலைமறைவாகி உள்ளனர்.. இவர்களுக்குள் ஏதாவது பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருக்குமோ அல்லது விபச்சார வழக்கில் ஏதாவது தகராறு இவர்களுக்குள் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.. எனவே, அந்த 3 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் துரிதமாகி உள்ளனர்.. அவர்கள் சிக்கினால்தான் இந்த விஷயத்தில் உண்மைதன்மை என்ன என்பது தெரியவரும்.

  English summary
  Dead body of a woman was found in a locked House in Salem
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X