சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாள்தோறும் பங்கீடு அடிப்படையில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர்.. டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

மேட்டூர்: முதல்வரின் பேச்சால் நடப்பாண்டில் குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 52,21 அடியாக உள்ளது.

இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியிருப்பது விவசாயிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Delta farmers Emphasis on the basis of day-by-day distribution of water from Karnataka

இன்னும் 1 மாதம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தென்மேற்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்தால் கூட, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவது சந்தேகமே. கர்நாடக அணைகள் நிரம்பிய பிறகே காவிரியில் தண்ணீர் திறப்பதை அம்மாநில அரசு வழக்கமாக கொண்டிருப்பதே இதற்கு காரணம்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காவிரியில் இருந்து தற்போது 25 முதல் 50 கனஅடி வரை மட்டுமே நீர் வந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். மேட்டூர் அணையில் 90 முதல் 100 அடி இருந்தால் மட்டுமே டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க முடியும்.

பொள்ளாச்சியைபோல் மாமல்லபுரத்திலும் மதுவிருந்து.. போதையில் ஆட்டம் போட்ட பெண்கள் உள்பட 160 பேர் கைது பொள்ளாச்சியைபோல் மாமல்லபுரத்திலும் மதுவிருந்து.. போதையில் ஆட்டம் போட்ட பெண்கள் உள்பட 160 பேர் கைது

ஆகவே போதிய தண்ணீர் இல்லாததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் காவிரியில் உரிய தண்ணீரை திறக்க கர்நாடகாவை வலியுறுத்த விவசாயிகள் கோரியுள்ளனர்

ஆண்டுதோறும் இது போன்றதொரு நிலை உருவாவதை தடுக்க கர்நாகாவிடமிருந்து நாள்தோறும் பங்கீடு அடிப்படையில் தண்ணீரை பெற வேண்டும் என்றும் காவிரி டெல்டா விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

English summary
There is doubt that the Mettur dam will be opened for timely irrigation at the time of the CM's speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X