சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குதிரை பேரத்தை தடுக்க.. பவுன்சர்களுடன் அழைத்து வரப்பட்ட சேலம் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள்

Google Oneindia Tamil News

சேலம்: சேலம் திமுக ஒன்றிய கவுன்சிலர்களை தக்கவைத்துக் கொள்ள பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டனர்.

தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுகவை காட்டிலும் திமுக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.

DMK Councilors were brought to polling station with bouncers

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதன்படி சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற்றது.

ஒன்றிய குழு உறுப்பினர்கள் திமுக கூட்டணியில் 7 பேரும், அதிமுக சார்பாக 6 ஒன்றியக் குழு உறுப்பினர்களும், சுயேச்சைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற 10 ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

ஜேஎன்யூ தாக்குதலை திட்டமிட்டு செய்த ஏபிவிபி.. பரபர வாட்ஸ் ஆப் ஆதாரங்கள்.. விசாரிக்கும் டெல்லி போலீஸ்ஜேஎன்யூ தாக்குதலை திட்டமிட்டு செய்த ஏபிவிபி.. பரபர வாட்ஸ் ஆப் ஆதாரங்கள்.. விசாரிக்கும் டெல்லி போலீஸ்

இந்த நிலையில் திமுக, அதிமுக என எவருக்கும் தனி மெஜாரிட்டி இல்லாத நிலையில் தங்களுக்கு ஆதரவான ஒன்றிய கவுன்சிலர்களை தக்கவைத்துக்கொள்ள திமுக சார்பில் பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திமுகவினர் ஒன்றிய கவுன்சிலர்களை தக்க வைத்துக் கொள்ள பவுன்சர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
DMK Councilors were brought to polling station with bouncers to avoid horse trading in Ayodhyapattinam, Salem District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X